போதையில் இருந்ததை கண்டித்த தந்தையை கொன்ற மகன் கைது
திருவாரூர்: குடிபோதையில், தந்தையை அடித்துக் கொன்ற மகன், நேற்று கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர், கரிகாலன், 48; டிபன் கடைக்காரர். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதால், இவரது மனைவி, தன் அண்ணன் வீட்டிற்கு, மகன், மகளுடன் சென்று விட்டார்.
பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து வந்த மகன் ஸ்ரீகுமரன், 17, கல்லுாரிக்கு சரி வர செல்வதில்லை என கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு மது அருந்தி விட்டு, தந்தை வசிக்கும் வீட்டிற்கு, ஸ்ரீகுமரன் வந்தார். ஸ்ரீகுமரன் போதையில் இருந்ததை கரிகாலன் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதில், ஆத்திரமடைந்த ஸ்ரீகுமரன், பீர் பாட்டிலால், கரிகாலன் தலையில் தாக்கினார். படுகாயம் அடைந்த அவர், திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு, கரிகாலன் இறந்தார்.
திருத்துறைப்பூண்டி போலீசார், ஸ்ரீகுமரனை கைது செய்தனர்.
மேலும்
-
சீசன் எதிரொலியால் ராமநாதபுரத்திற்கு மாம்பழம் வரத்து; கிலோ ரூ.120
-
பட்டத்துடன் மழலையர் மகிழ்ந்த தருணம்
-
உத்தரகோசமங்கையில் உலக நடன தின விழா காலை முதல் மாலை வரை நடந்தது
-
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை துாய்மைப்படுத்த... 45 நாள் கெடு!: தடைக்காலத்தை பயன்படுத்த தீர்ப்பாயம் அறிவுரை
-
தமிழ் ஒருபோதும் என்னை கைவிடவில்லை பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தன் பெருமிதம்
-
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நீர்மட்டம் திடீர் உயர்வு: உள்ளான் பறவைகள் மாயம்