'உம்மிடி பங்காரு' நகை கடை புதிய கட்டடம் நாளை திறப்பு

சென்னை: அண்ணா சாலையில், 125 ஆண்டு கால பாரம்பரியத்துடன் செயல்படும் உம்மிடி பங்காரு நகைக்கடையின் புதிய கட்டடம், நாளை திறக்கப்பட உள்ளது.

இது குறித்து, உம்மிடி பங்காரு நகைக்கடை நிர்வாக பங்குதாரர்கள் அமரேந்திரன் உம்மிடி, ஜித்தேந்திரா உம்மிடி ஆகியோர் அளித்த பேட்டி:

அண்ணா சாலையில் உள்ள நகை கடை கட்டடத்தை ஒட்டி, புதிய கட்டடம், 14,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கட்டடத்தின் தரை தளத்தில் தங்கம், வைரம் மற்றும் 'ஜடாவ்' நகைகள்; முதல் தளத்தில் வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகளின் சேகரிப்புகள் இடம் பெற்றுள்ளன. பிரத்யேக சொகுசு தளம், தனிப்பட்ட சேவை மற்றும் கைவினை திறனை பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

கடை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, கோவை, திருச்சி, ஹைதராபாத் நகரங்களிலும், சென்னை தி.நகர் மற்றும் குரோம்பேட்டையிலும், புதிய கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம்.

சர்வதேச அளவில், அமெரிக்காவின் டெக்சாஸ் மற்றும் கலிபோர்னியாவிலும், கிளைகளை விரிவுப்படுத்த உள்ளோம். ஐந்தாவது தலைமுறையாக, கடையை நடத்தி வருகிறோம்.

பார்லிமென்ட் புதிய கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள, வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை உருவாக்கிய பெருமை, எங்களுக்கு உள்ளது.

பாரம்பரியத்துடன் நவீன கால வடிவமைப்புகளை இணைத்து, நகை விற்பனைத் துறையில் ஒரு முன்னோடியாக, தன் அடையாளத்தை உம்மிடி பங்காரு உயர்த்தி வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement