கோடையில் தண்ணீர் இன்றி தவிக்கும் கால்நடைகள்

அருப்புக்கோட்டை, ஏப். 30-

அருப்புக்கோட்டை , திருச்சுழி பகுதிகளில் கடும் கோடை வெயிலால் கால்நடைகள் தண்ணீரின்றி அவதிப்படுகின்றன.

அருப்புக்கோட்டை திருச்சுழி பகுதிகளில் ஆடுகள் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. ஊராட்சிகள் மூலம் கிராமப்புறங்களில் 2017 ல், கால்நடை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. முறையான பராமரிப்பு, மின்மோட்டார் பழுது உள்ளிட்ட காரணங்களால் தொட்டிகளில் தண்ணீர் இல்லை. பெரும்பாலான தொட்டிகள் செடி, கொடிகள், புதர்கள் மண்டி உள்ளது. இதனால் தற்போது வெயிலில் கால்நடைகள் தண்ணீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் கால்நடைகளுக்கு நீர் இழப்பு , வெப்ப அயற்ச்சியினால் பாதிப்பு அடைகின்றன. ஊராட்சி நிர்வாகங்கள் வெயிலில் தாக்கத்தை கருத்தில் கொண்டு கால்நடைகளுக்கு தற்காலிகமாக மின்மோட்டார் அமைத்து தொட்டிகளில் தண்ணீர் தேக்கி தாகத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாய் பகுதிகளில் தற்காலிகமாக கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

____

Advertisement