இதே நாளில் அன்று

மே 1:

சென்னையில், இசை பாரம்பரியம் மிக்க குடும்பத்தில், 1954 மார்ச் 17ல் பிறந்தவர் உமா.

இவர், சென்னை ராணி மேரி கல்லுாரியில் படித்தார். பழனி விஜயலட்சுமியிடம் கர்நாடக சங்கீதம், பத்மா சுப்ரமணியத்திடம் பரதநாட்டியம் கற்றார். ஏ.வி.ரமணனின் மேடை கச்சேரிகளில் பாடகியாக பங்கேற்ற இவர், அவரையே மணந்து, உமா ரமணன் ஆனார்.

ஹிந்தியில், பிளே பாய் படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன், தமிழில், ஸ்ரீகிருஷ்ண லீலா படத்தில், இவரை பாடகியாக்கினார். இளையராஜாவின் இசையில், நிழல்கள் படத்தில் இவர் பாடிய, 'பூங்கதவே தாழ் திறவாய்' பாடலின் வாயிலாக புகழின் உச்சத்தை அடைந்தார்.

இளையராஜா இசையில், மூடுபனி, பன்னீர் புஷ்பங்கள், துாறல் நின்னு போச்சு உள்ளிட்ட படங்களில் பாடினார். 'ஆனந்த ராகம், அமுதே தமிழே, பூபாளம் இசைக்கும், ஆகாய வெண்ணிலாவே' உள்ளிட்ட இவரது பாடல்கள் தெவிட்டாத தேனமுதம். 4,000க்கும் மேற்பட்ட மேடைகளில் பாடி ரசிகர்களை மகிழ்வித்தவர், தன் 70வது வயதில், 2024ல் இதே நாளில் மறைந்தார்.

இவரது நினைவு தினம் இன்று!

Advertisement