கிரேட்டர் நிக்கோபர் திட்டத்துக்கு ராகுல் எதிர்ப்பு தேசிய பாதுகாப்பை மீண்டும் சீர்குலைக்க காங்., முயற்சி?
புதுடில்லி: அந்தமான் - நிக்கோபர் தீவில் மேற்கொள்ளப்படும் கிரேட்டர் நிக்கோபர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், ''நாட்டிலேயே இது மிகப்பெரிய ஊழல்,'' என குற்றஞ் சாட்டியுள்ளார்.
அந்தமான் - நிக்கோபர் தீவில் உள்ள நிக்கோபரில், 'கிரேட்டர் நிக்கோபர் திட்டம்' செயல்படுத்தப்பட உள்ளது.
பாதுகாப்பு மொத்தம் 81,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தின் வாயிலாக, சர்வதேச கொள்கலன் முனையம், பயணியர் மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கான பசுமை விமான நிலையம், மின் உற்பத்தி நிலையம் மற்றும் புதிய நகரமைப்பு ஆகியவற்றை மத்திய அரசு அமைக்க உள்ளது.
மலா க்கா ஜலசந்தி போன்ற முக்கிய கப்பல் போக்குவரத்து பாதைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த தீவின் அமைப்பை பயன்படுத்திக் கொள்வதன் மூலம், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் இருப்பை வலுப்படுத்துவதையும், வெளிநாட்டு மறு ஏற்றுமதி மையங்களை சார்ந்திருப்பதை குறைக்கவுமே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கடல்சார் வணிகம் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு, தொடக்கம் முதலே காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், அந்தமான் - நிக்கோபர் தீவுகளுக்கு சென்றுள்ள அக்கட்சி எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், இது தொடர்பாக நேற்று கூறியதாவது:
பேரழிவு என் வாழ்நாளிலேயே மிகவும் அரிய, வியக்கத்தக்க வகையிலான ஏராளமான மரங்களை அந்தமான் - நிக்கோபர் தீவில் பார்த்துள்ளேன்.
அவை அனைத்தும், நினைவுகளுக்கு அப்பாற்பட்ட பழமையான மரங்கள்.
தலைமுறை கடந்து வா ழும் மரங்கள் அடங்கிய காடு இது.
இங்குள்ள மக்களும் அப்படித்தான். இங்கே வசிக்கும் பழங்குடியினர் ஆகட்டும் அல்லது இந்த பகுதியில் கு டியேறிவர்களாகட்டும்; அவர்களுக்கு சொந்தமான உரிமைகள், அவர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு வருகின்றன.
கோடிக்கணக்கான மரங்கள் இங்கு கோடாரியின் வெட்டுக்கு குறிவைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 160 சதுர கி.மீ., பரப்பளவில் உள்ள இந்த மழைக்காடுகள் அழிவை நோக்கி தள்ளப்பட்டுள்ளன.
இது வளர்ச்சி அல்ல; வளர்ச்சி என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுள்ள பேரழிவு. அந்தமான் - நிக்கோபர் தீவில் தற்போது நடந்து கொண்டிருப்பது, இயற்கை மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான நாட்டின் மிகப்பெரிய ஊழல்.
குற்றம் மேம்பாடு என்ற பெயரில், இயற்கையால் வழங்கப்பட்ட சொர்க்கத்தை அழிக்க நினைப்பது மாபெரும் குற்றம். இது, உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
அந்தமான் - நிக்கோபர் தீவில் உள்ள உண்மையை, நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் கண்டால் மட்டுமே இந்த குற்றம் தடுத்து நிறுத்தப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்
-
நெய்வாசலுக்கு பஸ் இயக்க கோரிக்கை
-
வீரனார் குளத்தில் மண்டியுள்ள புற்கள் அகற்றப்படுமா?
-
பாதாள சாக்கடை திட்டம் வார்டு மக்கள் கோரிக்கை
-
யாழ்ப்பாணத்தில் தமிழர் எலும்புக்கூடுகள் கிடைத்த பகுதியில் மீண்டும் அகழாய்வு இலங்கை கோர்ட் உத்தரவு
-
கிணற்றில் விழுந்த விவசாயி சாவு
-
வீட்டில் பதுக்கிய மது தொழிலாளிக்கு 'காப்பு'