வீரனார் குளத்தில் மண்டியுள்ள புற்கள் அகற்றப்படுமா?
விருத்தாசலம்: வீரனார் குளத்தில் மண்டியுள்ள புற்களை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மங்கலம்பேட்டை வீரனார் குளத்தினை கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்கும், கால்நடைகள் குடிநீருக்கும் பயன்படுத்தி வந்தன.
நாளடைவில், அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலந்ததால், கழிவுநீர் குளமாக மாறியது.
இதனால் பொதுமக்கள் குளத்தினை அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்துவதை கைவிட்டனர்.
இதனால் தற்போது குளம் முழுவதும் புற்கள், ஆகாய தாமரை அதிகளவில் மண்டி யுள்ளது.
பொதுமக்கள் நலன் கருதி வீரனார் குளத்தில் கலக்கும் கழிவுநீரை தடுக்கவும், சம்பு புற்கள், ஆகாயதாமரையை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement