வீட்டில் பதுக்கிய மது தொழிலாளிக்கு 'காப்பு'

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அடுத்த கரிக்கல்நத்-தத்தை சேர்ந்தவர் குமரேசன், 40, தொழிலாளி. இவர் அரசு மது-பானத்தை அதிகளவில் பதுக்கி, அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


மாவட்ட எஸ்.பி., தங்கதுரை உத்தரவுப்படி, டி.எஸ்.பி., ராமச்சந்-திரன் மேற்பார்வையில் குருபரப்பள்ளி இன்ஸ்பெக்டர் செந்தில்-குமார் தலைமையிலான போலீசார், சோதனை நடத்தினர். இதில், குமரேசன், 40 பெட்டிகளில், 314 லிட்டர் மதுபானங்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து, கார் ஒன்றையும், மதுபான பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement