நெய்வாசலுக்கு பஸ் இயக்க கோரிக்கை
திட்டக்குடி: திட்டக்குடியில் இ ருந்து ஆவினங்குடி வழியாக நெய்வாசலுக்கு அரசு டவுன் பஸ் இயக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டக்குடி அடுத்த நெய்வாசல் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக் கின்றனர்.
இக்கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாததால், பொது மக்கள் 4 கிலோ மீட்டர் துாரமுள்ள ஆவினங்குடி பஸ் நிறுத்தம் அல்லது 6 கிலோ மீட்டர் துாரமுள்ள கொடிகளம் பஸ் நிறுத்தத்திற்கு நடந்து வந்து பஸ் ஏற வேண்டியுள்ளது.
பஸ் வசதி கோரி மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகளிடம் கிராம மக்கள் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இதனால் பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
எனவே, திட்டக்குடியில் இருந்து ஆவினங்குடி வழியாக நெய்வாசலுக்கு அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
சொல்கிறார்கள்
-
சொல்கிறார்கள்
-
தயார் அரசு மருத்துவமனைகளில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ வார்டுகள்நோய் பாதித்தால் தனி போர்டலில் பதிவேற்ற பயிற்சி
-
கோயில் திருவிழா
-
பால் குளிரூட்டும் இயந்திரங்களைபயன்இன்றி பூட்டி வைத்துள்ள ஆவின் பால் வீணாவதாக உற்பத்தியாளர்கள் புகார்
-
மதியம் விவசாய பணிகளை தவிர்க்கதோட்டக்கலைத்துறை அறிவுறுத்தல்