கிணற்றில் விழுந்த விவசாயி சாவு

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பி.கொல்லஹள்ளி கிரா-மத்தை சேர்ந்த விவசாயி சிவக்குமார், 37. இவரது மனைவி பட-வட்டம்மாள், 30. தம்பதிக்கு, 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு சிவக்குமார், தன் விவ-சாய நிலத்திலுள்ள கிணற்றில், தண்ணீர் அளவை பார்க்க கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினார். கிணற்றிலிருந்து மேலே ஏறி வந்தபோது,
பக்கவாட்டு சுவற்றில் மோதி, கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.


இதில், பலத்த காயமடைந்தவரை, பாலக்கோடு தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டு, தர்மபுரியில் உள்ள தனியார் மருத்-துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிவக்குமார்
ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement