ரூ.11 கோடி போதை பொருள் கடத்திய 2 பெண்கள் கைது

ஹைதராபாத்: டில்லியில் இருந்து பெங்களூரு செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரசில், பெண்கள் இருவர் போதை பொருள் கடத்தி வருவதாக டி.ஆர்.ஐ., எனப்படும் வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநரக அதிகாரிகளுக் கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து விரைந்து வந்த டி.ஆர்.ஐ., அதிகாரிகள் தெலுங்கானாவின் செகந்திராபாத் ரயில் நிலையத்துக்கு வந்த ராஜ்தானி எக்ஸ்பிரசில் சோதனையிட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக அதில் இருந்த இரு பெண்களின் உடைமைகளை சோதனையிட்டனர். அதில், 11.40 கிலோ மெத்ஆம்பெட்டமைன் போதை பொருள் இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அதன் சர்வதேச சந்தை மதிப்பு 11.40 கோடி ரூபாய். போதை பொருள் கடத்தல் தொடர்பாக இரு பெண்களையும் அவர்கள் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement