ஸ்ரீ சக்தி முனீஸ்வரர் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
கோத்தகிரி: கோத்தகிரி பில்லிக்கப்பை கோவில் மேடு ஸ்ரீ சக்தி முனீஸ்வரர் கோவில் ஆண்டு திருவிழா கோலாகலமாக நடந்தது.
கடந்த, 20ம் தேதி காலை, 9:30 மணிக்கு, கொடியேற்றத்துடன்,விழா துவங்கியது. 26ம் தேதி, நள்ளிரவு, 12:00 மணிக்கு சக்தி அழைப்பு சிறப்பு பூஜை நடந்தது. 27ம் தேதி காலை, 11:00 மணிக்கு, கங்கையிலிருந்து கரக ஊர்வலம் நடந்தது. பகல், 2:00 மணிக்கு, ஐயனுக்கு சிறப்பு பூஜையுடன், 3:00 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு, வாணவேடிக்கை நிகழ்ச்சி இடம்பெற்றது.
28ம் தேதி காலை, 10:00 மணிக்கு, பொங்கல் பூஜையும், 12:00 மணிக்கு, தாரை தப்பட்டை முழங்க, ஐயனுக்கு சிறப்பு பூஜையும் நடந்தது.
மாலை, 6:00 மணிக்கு, கரகம் கங்கை சேர்த்தல் நிகழ்ச்சியுடன், மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.
அதில், கோவில்மேடு சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக பங்கேற்று ஐயனை வழிபட்டனர். கோவில் கமிட்டி சார்பில், நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
4ம் தேதி காலை, மறுப்பூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ முனீஸ்வரர் இளைஞர் சங்கம், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
மேலும்
-
நெய்வாசலுக்கு பஸ் இயக்க கோரிக்கை
-
வீரனார் குளத்தில் மண்டியுள்ள புற்கள் அகற்றப்படுமா?
-
பாதாள சாக்கடை திட்டம் வார்டு மக்கள் கோரிக்கை
-
யாழ்ப்பாணத்தில் தமிழர் எலும்புக்கூடுகள் கிடைத்த பகுதியில் மீண்டும் அகழாய்வு இலங்கை கோர்ட் உத்தரவு
-
கிணற்றில் விழுந்த விவசாயி சாவு
-
வீட்டில் பதுக்கிய மது தொழிலாளிக்கு 'காப்பு'