உலக நன்மை வேண்டி மஹா சுதர்சன யாகம்
கிருஷ்ணகிரி: மலையப்ப சீனிவாச பெருமாள் கோவிலில், உலக நன்மை வேண்டி, மஹா சுதர்சன யாக வேள்வி நடந்தது.
கிருஷ்ணகிரி பழையபேட்டை மலையப்ப சீனிவாச பெருமாள் மற்றும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், சித்ரா பவுர்-ணமியை முன்னிட்டு, நேற்று உலக நன்மை வேண்டி, மஹா சுதர்சன யாக வேள்வி நடந்தது.இதையொட்டி அதிகாலை, அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு தீர்த்தம் கொண்டு வருதல், யாக சாலை பிரவேசம், கங்கனம் கட்-டுதல், மகா கணபதி பிரார்த்தனை, மகா கணபதி ஹோமம், நவக்-கிரக ஹோமம், செந்துார் முருகன் மூல மந்திர மஹா ஹோமம் ஆகியவை நடந்தது.
தொடர்ந்து, சீனிவாச பெருமாள், நரசிம்மர், மஹாலட்சுமி, ஆண்டாள், ஆஞ்சநேயர், கருடாழ்வார், சத்யநாராயண சுவாமி, ஹயக்ரிவர் லட்சுமி நாராயணர் மற்றும் கிராம தேவதை, மஹா சுதர்சன யாகம், பூர்ணாஹூதி, மகா சங்கல்பம், வேத பாரா-யணம், மஹா மங்கள ஆர்த்தி, தீர்த்தப்பிரசாதம் வழங்குதல்
ஆகியவை நடந்தது.
மாலை, 5:00 மணிக்கு, 2ம் கால யாக வேள்வி, மஹா சுதர்சன, 2ம் ஹோமம் ஆகியவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்-கேற்றனர்.
இன்று காலை, 3ம் கால யாக வேள்வி, மஹா சுதர்சன ஹோமம், மாலை, 6:00 மணிக்கு, 4ம் கால யாக வேள்வி, மஹா சுதர்சன ஹோமம் ஆகியவை நடக்கிறது. நாளை, 5ம் கால யாக வேள்வி, உலக நன்மை வேண்டுதல், பால்குட ஊர்வலம், திருவிளக்கு பூஜை ஆகியவை நடக்க உள்ளது.