தி.மு.க.,நிர்வாகிகளுக்கு வி.சி., வேட்பாளர் சால்வை

திண்டிவனம்: திண்டிவனத்தில் நகர தி.மு.க.,நிர்வாகிகள் கூட்டத்தில் வி.சி.,வேட்பாளர் நன்றி தெரிவித்தார்.

திண்டிவனம்(தனி) தொகுதியில் தி.மு.க.,கூட்டணியிலுள்ள வி.சி.கட்சி சார்பில் வன்னி அரசு வேட்பாளராக போட்டியிட்டார். ஓட்டுப்பதிவு கடந்த 23ம் தேதி நடந்த நிலையில், நேற்று மாலை, திண்டிவனம் நகர தி.மு.க., அலுவலகத்தில் வி.சி.,சார்பில் தி.மு.க.,நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு நகர தி.மு.க.,அவைத்தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகர தி.மு.க.,செயலாளர் கண்ணன் நிர்வாகிகளை அறிமுகம் செய்து பேசினார். கூட்டத்தில் வி.சி.,வேட்பாளர் வன்னி அரசு தி.மு.க.,நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.தொடர்ந்து தி.மு.க.,கிளை நிர்வாகிகள் மற்றும் நகராட்சி கவுன்சிலர்களுக்கு வேட்பாளர் சால்வை அணிவித்தார்.

கூட்டத்தில் துரைரவிக்குமார் எம்.பி., தி.மு.க.,பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், செயற்குழு உறுப்பினர் சின்னச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு, மாவட்ட வர்த்தகர் அணி பிரகாஷ், கவுன்சிலர்கள் ராம்குமார், நந்தகுமார், பாஸ்கர், சுதாகர், மாவட்ட பிரதிநிதி சின்னதுரை, முருகன், நகர பொருளாளர் ராஜேந்திரன், நகர துணை செயலாளர் கவுதமன், வி.சி.,நிர்வாகிகள் சேரன், திலீபன், மலைச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement