கி.கிரியில் ஓட்டு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஓட்டு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடு பணி-களை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார்.


கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 6 சட்டசபை தொகுதிகளுக்குமான ஓட்டு எண்ணிக்கை தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தினேஷ்குமார் நேரில் ஆய்வு செய்தார்.பின்னர் அவர், நிருபர் களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ண-கிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய, 6 சட்டசபை தொகுதிக-ளுக்கான வாக்கு எண்ணும் மையம் கிருஷ்ணகிரி அரசு பாலி-டெக்னிக் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்-ணிக்கை வரும், மே, 4 காலை, 8:--00 மணிக்கு துவங்குகிறது.
தொகுதிகள் வாரியாக, ஓட்டுச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்-பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்-கப்பட்டுள்ளன. இம்மையங்களுக்கு, மூன்றடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், போலீசார் சார்பில் பாதுகாப்பு அறைகள், அரசு பாலிடெக்னிக் கல்லுாரி வளாகம் நுழைவாயில்-களில், 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஓட்டு எண்-ணிக்கை நாளன்று நிருபர்கள், தொலைக்காட்சியினருக்கு ஊடக மையம் தனியாக அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
மாவட்ட எஸ்பி., தங்கதுரை, டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், கிருஷ்-ணகிரி டி.எஸ்.பி., ராமச்சந்திரன், தேர்தல் தனி தாசில்தார் சம்பத்
உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement