முக்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் முக்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் உத்சவம் விமரிசையாக நடந்தது.
செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் கிராமத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ தர்மசம்வர்த்தினி அம்பிகா சமேத ஸ்ரீ முக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சித்தரை பிரம்மோத்சவ விழா நடைபெறாமல் இருந்தது.
இந்தாண்டு, முக்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகத்துடன், சித்திரை பிரம்மோத்சவம் விழா கொடியேற்றத்துடன் கடந்த 19ம் தேதி தொடங்கியது.
இதில் முக்கிய விழாவான தேர் திருவிழா 23ஆம் தேதி நடந்து. அதன்பின், 63 நாயன்மார்கள் வீதியுலா மற்றும் முக்தீஸ்வரருக்கும், தர்மசம்வர்த்தினி அம்பிகாவுக்கும் திருக்கல்யாண உத்சவம், நேற்று முன்தினம் இரவு, நடந்தது.
இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ முக்தீஸ்வரர் சேவா அறக்கட்டளை செய்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement