பூட்டிய வீட்டில் 10 சவரன் திருட்டு
சென்னை: சென்னை கே.கே., நகர், வேம்புலியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன், 85. இவரது மகன் மற்றும் மகள் வெளிநாட்டில் வசிக்கின்றனர். மனைவி இறந்ததால், தன்னை கவனித்துக் கொள்ளவும், வீட்டு வேலைக்காகவும், பெண்களை வேலைக்கு வைத்துள்ளார்.
சமீபத்தில், உடல்நிலை பாதிக்கப்பட்ட நடராஜன், தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, வீடு திரும்பினார்.
அப்போது, பீரோவில் இருந்த நகைகளை சோதித்ததில், 10 சவரன் நகைகள், 2 லட்சம் ரூபாய் திருடுபோயிருந்தது தெரிந்தது. கே.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement