சுற்றி செல்வதை தவிர்க்க சாலை மையத் தடுப்பு அகற்றம்
காஞ்சிபுரம்: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சுற்றி செல்வதை தவிர்க்க தாமலில் சாலை மைய தடுப்பு அகற்றப்பட்டது.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், இடதுபுறமாக செல்லும் வாகனங்கள் தாமல் அருகே, வலதுபுறம் எதிர் திசை பகுதிக்கு செல்லும் வாகனங்களால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது.
இதை தடுக்கும் விதமாக, இடது புறமாக செல்லும் வாகனங்கள், வலது புறமாக கடக்காமல் இருக்க, தேசிய நெடுஞ் சாலைத் துறையினர் சாலை மையத்தில், தடுப்பு அமைத்திருந்தனர்.
இதனால், தாமல் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க, நீண்ட துாரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதை தவிர்க்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதை ஏற்று, தாமல் அருகே போடப்பட்டிருந்த மைய தடுப்பை அகற்றி பாதை ஏற்படுத்தி உள்ளனர். இதன் மூலமாக, சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை எளிதாக கடக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
மேலும்
-
ஜிஎஸ்டி நீக்கம் எதிரொலி; ரூ.1 கோடிக்கான மருத்துவக் காப்பீட்டில் மக்கள் ஆர்வம்
-
மே 2வது வாரத்தில் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு
-
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு; இந்திய வானிலை மையம்
-
தவறை தட்டி கேட்டது தவறா? மனைவி, மகள் கண் முன் பயணியை அடித்து அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் அராஜகம்
-
பிளாஸ்டிக் குடம் விற்பனை அதிகரிப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது; இன்றைய நிலவரம் இதோ!