மே 7, 8ல் அரசு விளையாட்டுவிடுதிகளில் மாணவர்கள் தேர்வு
கரூர்:விளையாட்டு விடுதிகளில் தேர்வு போட்டி மே 7, 8 ஆகிய நாட்கள் நடக்கிறது என, கலெக்டர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மே, 7, 8 ஆகிய நாட்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதிகளில் தேர்வு போட்டி நடக்கிறது. இதில், 10 வயது முதல் 17 வயதிற்குட்பட்ட 6, 7, 8, 9, பிளஸ் 1 வகுப்பில் சேரவுள்ள மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கபடி, கையுந்துபந்து, கிரிக்கெட் (மாணவர்களுக்கு மட்டும்), வாலிபால் ஆகிய விளையாட்டுகளுக்கு போட்டி நடக்கிறது.
மேலும், சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில், குத்துச்சண்டை (மாணவர்கள்), வாள் விளையாட்டு, ஜூடோ, தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில், பளுதுாக்குதல், சென்னை வேளச்சேரியில் நீச்சல் போட்டி, கடலுார் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மல்யுத்தம், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் டேக்வாண்டோ உள்பட பல்வேறுபோட்டிகள் மே 12ல் நடக்கிறது.
இப்போட்டியில் பங்கேற்க, ஆதார் அட்டை நகல், பிறப்பு சான்றிதழ் நகல், விளையாட்டு சான்றிதழ், பள்ளியில் பயில்வதற்கான ஏதேனும் ஒரு ஆவணம் ஆகிய சான்றிதழ்கள் கட்டாயம் சமர்ப்பித்தல் வேண்டும். மே., 3க்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை, 04324-299826 7401703493-ல் ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.