கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷம்

கரூர்:கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை மாத பிரதோஷ விழாவில், நேற்று பக்தர்கள் பங்கேற்றனர்.

பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள, நந்தி சிலைக்கு நேற்று மாலை, 4:30 மணி முதல் பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து மூலவர், நடராஜர் மற்றும் நந்தி சிலைக்கு நடந்த மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

* வேலாயுதம்பாளையம் அருகே, நன்செய் புகழூர் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில், சித்திரை மாத பிரதோஷ விழா நடந்தது. அதில், நந்தி சிலைக்கு அபி ேஷகம் நடந்தது. பிறகு, மூலவர் மேகபாலீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Advertisement