தர்பூசணி விளைச்சல் பாதிப்பு

கிருஷ்ணராயபுரம் :கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பூர், பூஞ்சோலைபுத்துார், கோரக்குத்தி, கொசூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. கடும் வெப்பம் காரணமாக, காய்கள் போதுமான அளவில் பெரிதாகாமல் காணப்படுகிறது.


மேலும் செடிகளில் காய்களும் குறைந்தளவே காணப்படுகிறது. இதனால் மகசூலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தர்பூசணி கிலோ, 20 ரூபாய்க்கு விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கி
செல்கின்றனர்.

Advertisement