பஸ்சை வழி மறித்து டிரைவரைதாக்கிய மூவர் மீது வழக்கு பதிவு

குளித்தலை :குளித்தலை அடுத்த சத்தியமங்கலம் கிராமத்தை சேர்ந்த முருகேசன், 35, தனியார் பஸ் டிரைவராக உள்ளார்.


இவர் நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், திருச்சியில் இருந்து பாளையம் நோக்கி
செல்லும் போது, மருதுார் சோதனை சாவடி அருகே, திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த கவின்பிரின்சி, 24, திருச்சி மாவட்டம் கிளியநல்லுார் காந்தவேல், 56, பெட்டவாய்த்தலை ஆறுமுகம், 56, ஆகியோர் காரில் வந்து வழி மறித்து தனியார் பஸ் டிரைவரிடம் தகராறு
செய்தனர்.அப்போது தனியார் பஸ் வேகமாக வந்து, கார் மீது விபத்து ஏற்படும் வகையில் சென்றதால், டிரைவரிடம் மூவரும் தகராறு செய்து, கைகளால் தாக்கி கொலை மிரட்டல்
விடுத்தனர்.இதையடுத்து, மூவர் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement