கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படையுங்கள்; பிரிட்டன் மன்னரிடம் வலியுறுத்தும் மம்தானி
நியூயார்க்: வரலாற்றுச் சிறப்புமிக்க கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பித் தருமாறு பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸிடம் வலியுறுத்தப் போவதாக நியூயார்க் நகர மேயரும், இந்திய வம்சாவளியினருமான சோஹ்ரான் மம்தானி தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸ் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மன்னர் 3ம் சார்லஸூம், ராணி கேமிலாவும், கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்பட்ட இரட்டை கோபுரத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், மன்னர் 3ம் சார்லஸை நியூயார்க் நகர மேயரும், இந்திய வம்சாவளியினருமான சோஹ்ரான் மம்தானி சந்தித்து பேசினார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய மம்தானி, "பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸைச் சந்திக்கும்போது வரலாற்றுச் சிறப்புமிக்க கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பித் தருமாறு அவரிடம் வலியுறுத்துவேன்," என்று கூறினார். ஆனால், மன்னர் 3ம் சார்லஸூடனான சந்திப்பின் போது வைரத்தைப் பற்றிய பேச்சு நடத்தப்பட்டதா? என்பது குறித்து தெளிவான தகவல் ஏதுமில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவிக்க பக்கிங்ஹாம் அரண்மனையும் மறுத்துவிட்டது.
கோஹினூர் வைரம்
105.6 காரட் எடை கொண்ட கோஹினூர் வைரம், உலகின் மிக விலையுயர்ந்த வைரங்களில் ஒன்றாகும். 1849ம் ஆண்டு லாகூர் உடன்படிக்கையின் மூலம், மகாராஜா துலீப் சிங்கிடமிருந்து பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் இந்த வைரத்தைக் கைப்பற்றியது. தற்போது இந்த வைரம் ராணி எலிசபெத்தின் கிரீடத்தில் பதிக்கப்பட்டு, லண்டன் கோபுரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த வைரம் காலனித்துவ சுரண்டலின் சின்னம் என்றும், சீக்கிய மன்னரிடமிருந்து கட்டாயப்படுத்திப் பறிக்கப்பட்டது என்றும் கூறி, வைரத்தை மீண்டும் ஒப்படைக்குமாறு பிரிட்டனிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ராசியில்லாத இந்த வைரம் வந்து ஆகப்போவது ஒன்றுமில்லை. திடீரென்று மேயர் ஆன இந்திய வம்சாவளி ஆசாமியாம் இந்த மனிதர். இந்த அமைதி மார்க்க ஆசாமி கோஹினூர் வைரம் பற்றி பேசுவது உள் நோக்கம் கொண்டது மாதிரி தான் உள்ளது..இந்த ஆளின் தாயார் இந்தியாவில் இந்தியர்களை கேவலப்படுத்தி சினிமா எடுத்தவர், ஹிந்து , பெயர் மீரா நாயர். இவர் இந்தியாவை விட்டு ஓடிப்போய் ஆப்பிரிக்காவில் செட்டில் ஆகி ஆப்பிரிக்க முஸ்லிம் மதத்தவரை திருமணம் செய்து 2 குழந்தைகள் பெற்று பின்னர் அமெரிக்க குடியுரிமை வேண்டிப் பெற்றார்.
பிரிட்டிஷ்காரன், மத்தியில் உள்ள அரசியல்வாதிகள் திருடன்கள் கூட்டு களவாணிகள் கட்சிகள் கார்ப்பரேட் திருடன்கள் முதல் நம்மூர் வார்டு உறுப்பினர் வரை இதுவரை கொள்ளை அடித்ததை மீட்டால் நம் நாடு உலக வங்கிக்கே பல லட்சம் கோடிகள் கடன் கொடுக்கலாம் ஆனால் இதெல்லாம் கணவில் மட்டுமே நடக்கும்
அந்த கோஹினூர் வைரம் லண்டனில் இருக்கும் வரைதான் இங்கிலாந்து செழிப்பாக இருக்கும்னு யாரோ ஒரு ஜோசியர் சொல்லி இருப்பார் போல இருக்கு. அதான் திரும்பி கொடுக்க மாட்டேங்கறாங்க
கோஹினூர் வைரத்தோடு இந்தியாவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நாற்பத்தைந்து டிரில்லியன் பவுண்டுகளையும் திருப்பி தரவேண்டும்.
வைரம் வேண்டாம் .... கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் வரவேண்டும் .....
அப்படியே ஈரானிடம் இருக்கும் தாரியானூர் வைரத்தையும் ஒப்படைக்க சொல்லுங்க
இந்த வைரம் முகலாயர் அமைதி வழி காட்டான் படையெடுத்து வந்தவன் ஹிந்து கோவிலில் இருந்து கொள்ளை அடித்தது. இந்த வைரம் கொல்லூர் வைர சுரங்கத்தில் ஆந்திர குண்டூர் மாவட்டத்தில் இருந்து கண்டு எடுக்கப்பட்டது. அதை ஆந்திராவில் உள்ள வாரங்கல் மஹாபத்ரகாளி கோவிலில் அப்போதைய அரசர்கள் பரிசாக அளித்து அம்மனுக்கு சூட்டப்பட்டது. அதை கொள்ளையடித்த தினத்தில் இருந்து கொள்ளை அடுத்தவர்களுக்கு பிரச்சனை ஆரம்பித்தது.
அதை வைத்து இருந்தவர்கள் குடும்பம் அழிந்தது அல்லது குடும்பத்தில் பலரும் நோய் வாய்ப்பட்டு இறந்தனர். இங்கிலாந்து அரசர் சார்லஸ் அவளது மருமகளுக்கு கான்செர் வந்து உள்ளது கவனிக்க தக்கது.
ஆனால் இவன் அதை முகலாய மற்றும் சுல்தான்களின் சொத்து என்று மறைமுகமாக கூவுகிறான். இவங்களை நம்பமுடியாது. வெளியில் சிரித்து முதுகில் குத்துவான்.
. அவர் எங்கு சொன்னார் வைரத்தை இந்தியாவிடம் வழங்க வலியுறுத்துவேன் என்று போனார்., அதாவது நமது அரசு இடம். அவர் ஒன்றும் முகலாயர் இடம் ஒப்படைக்க சொல்ல இல்லை.
இவர் உள்பட அமெரிக்காவை விட்டு வெளியேறி அமெரிக்காவை உள்ளூர் ஆதி குடியினரிடம் ஒப்படைக்கணும். செய்வாரா?
நல்ல முடிவு வரவேற்கத்தகுந்தது இந்திய பரம்பரையில் வந்த நபர் எங்கு இருந்தாலும் இந்தியாவின் பெயரை காப்பாற்றி நமது கலாசாரத்தையும் பண்பையும் உயர் நிறுத்தி அவர்களுக்காக எல்லா இடங்களிலும் பாடும் படும் எவராக இருந்தாலும் நாம் அவர்களை போற்றவேண்டும்
இது ஒரு ராசி இல்லாத சபிக்கப்பட்ட வைரம், இது யாரிடம் உள்ளதோ அவர்கள் ஏழ்மை/முன்னேற்றம் இருக்காது என்பார்களே!!!
உண்மை.