ஈரான் போருக்கு 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவு; கணக்கு சொல்கிறது பென்டகன்
வாஷிங்டன்: அதிபர் டிரம்பின் ஈரான் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய்) செலவாகியுள்ளது என பென்டகன் தெரிவித்து உள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்.,28ம் தேதி தாக்குதல்களை தொடங்கின. இத்தாக்குதலின் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான் இஸ்ரேல் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது பதில் தாக்குதலை நடத்தியது.
பிறகு போர் நீடித்த நிலையில், அமைதி பேச்சுக்காக தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போர் காரணமாக மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம் நிலவியது. தற்போது, ''அதிபர் டிரம்பின் ஈரான் போரினால் அமெரிக்காவிற்கு இதுவரை 25 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய்) செலவாகியுள்ளது.
இது குறித்து பென்டகனின் தற்காலிக கணக்காய்வாளர் ஜூல்ஸ் ஹர்ஸ்ட் கூறியதாவது: 25 பில்லியன் டாலர் செலவிற்கு, அதிநவீன ஆயுதங்கள் பயன்பாடு, கப்பல்கள் விமானங்கள், வீரர்களுக்கான செலவினம், பராமரிப்பு, போரில் இழந்த ஆயுதங்களுக்கான கணக்கு ஆகியவை காரணமாகும்.
போர் விமானங்கள் மற்றும் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் ரேடார்கள் உள்ளிட்ட பல்வேறு அமெரிக்க ராணுவ சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன. இவ்வாறு ஈரான் போர் செலவு விவரங்களை ஜூல்ஸ் ஹர்ஸ்ட் பார்லிமென்ட் உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
இந்த மோதலால் கூடுதலாக எவ்வளவு செலவாகும் என்பது குறித்த கேள்விக்கு, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
அவர் ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறாமல் இருப்பதை உறுதி செய்வதே முக்கியம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேற்காசியாவில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் நடத்திய கடுமையான தாக்குதல்களால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை சீரமைக்க பல்லாயிரம் கோடி ரூபாய் தேவைப்படலாம் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் இதனால் யாருக்கு நன்மை அவரது நாட்டிலும் இனி இதனுடைய பாதிப்பு வெகுவாகவே இருக்கும் உலகிலும் சிறிய நாடுகளை வெகுவாக தாக்கும் இதனால் அமெரிக்க பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு அமெரிக்க டாலரின் மதிப்பு பன்மடங்கு கீழ் விழும் அப்போதுதான் அமெரிக்க மக்கள் டிரம்பின் எதேச்சாரிக்கத்தை வெகுவாக புரிந்துகொவார்கள் அவரை பதவி நீக்கம் செய்யவும் செனட்டுக்கு ஏற்பாடு செய்வார்கள் இது விரைவில் நடக்கத்தான் போகிறது
உதயகீதம் படத்தில் வரும் கவுண்டமணியின் காமெடிதான் நினைவுக்கு வருகிறது ஏதோ பூவும் புஷ்பமும் வாங்குனது போக மிச்சம் மீதிய வெச்சு வருமானம் வருது ஏன்டா பூ வேற புஷ்பம் வேறையாடா?
தமிழ்நாட்டிலும் ஈரான் போருக்காக அதில் பாதி அளவு செலவு ஆகி உள்ளது. விரைவில் வெள்ளை அறிக்கை அளிப்போம்.
யார் உங்களை சண்டைக்கு போக சொன்னது
சண்டையில சட்டை கிளியுறது சகசம் - இதுக்கெல்லாம் அலுவப்புடாது
அட போங்கப்பா நீங்களாவது வீணாக்கிய ஏவுகணைக்கு கணக்கு காட்டுறியா அதில் ஊழல் செஞ்சிருக்கிய ஆனால் நாங்க எல்லாம் ராணுவ வீரர்களின் சவுக்கு பயன்படுத்தும் சவ பெட்டியிலும் ஊழல் செஞ்சாலும் மக்கள் எங்களுக்கு ஒட்டு போட்டு ஜெயிக்கவைப்பார்கள்
மூர்க்க மன்னருக்கு எப்போதும் இந்தியாவை இழிவு படுத்த வேண்டும் அப்போதுதான் அவருக்கு ஜென்ம சாபல்யம் அடைந்த பலன் கிட்டும். நீ உன் டொப்பிள் கொடி நாட்டுக்கு போய் விட்டால் நாங்கள் இங்கு எந்த பயமும் இல்லாமல் நிம்மதியாக இருப்போம்
குறுக்கு பட்டி அந்தோனிதாஸ். அவர் எங்க இந்தியாவை சிறுமை படுத்தி பேசினார்?
சண்டை இல்லாமல் இருந்தால் , இந்த பணம் வளர்ச்சி பணிகளுக்கு உதவலாம் . லட்ச கணக்கான மக்களின் பசி தீர்க்கலாம் ..யோசிப்பார்களா ??
"அடி கொடுத்த கைப்பிள்ளைக்கே இவ்வளவு செலவு என்றால் அடிபட்ட கட்டத்துரைக்கு எவ்வளவு செலவு ஆகியிருக்கும்?" - வடிவேல் ஊர் மக்கள் பேசிக்கொண்டது.மேலும்
-
(ரெசிபி) முட்டையில்லா சாக்லேட் பனானா கேக்
-
ரெசிபி 1 – ஆந்திர ஸ்டைல் கோங்கரா பச்சடி
-
(ரெசிபி–2) கிராமத்து ஸ்டைல் ஆட்டுக்கறி வறுவல்
-
(டிட் பிட்ஸ்) மைக்ரேன் பிரச்னைக்கு தீர்வு என்ன?
-
(டிட் பிட்ஸ்) பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய முக்கிய பரிசோதனைகள்
-
(டிட் பிட்ஸ்) வெய்யிலில் நம்மை காத்துக் கொள்ள செய்ய வேண்டியவை