இந்தியாவிலிருந்து திருடப்பட்ட 657 பழங்கால சிலைகளை திருப்பி கொடுத்தது அமெரிக்கா
வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி கொண்டு வரப்பட்ட 657 பழங்கால சிலைகளை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு தொன்மையான இடங்களும், சிலைகளும் உள்ளன. இந்த சிலைகளின் மதிப்பு, சர்வதேச அளவில் கோடிக்கணக்கில் இருக்கும். அந்த சிலைகளை கடத்தல்காரர்கள் திருடிச் சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்கின்றனர். இவ்வாறு கடத்தி வரப்பட்ட சிலைகளை பல நாடுகள் பறிமுதல் செய்து வைத்துள்ளன. அவற்றை திரும்ப பெறும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே அமெரிக்கா அரசு பல சிலைகளை இந்தியாவிடம் திருப்பி அளித்து உள்ளது.
தற்போது இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி கொண்டு வரப்பட்ட 657 பழங்கால கலைப்பொருட்கள் மற்றும் சிலைகளை அமெரிக்கா ஒப்படைத்துள்ளது. இதன் மதிப்பு 14 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 117 கோடி ரூபாய். இந்த சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள், நியூயார்க்கில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. சத்தீஸ்கரின் அவலோகிதேஸ்வரர், அபய முத்ரா புத்தர், நடன விநாயகர் போன்ற அரிய சிலைகள் இதில் அடங்கும்.
மற்றொரு முக்கியப் பொருள், 7.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள சிவப்பு மணற்கல் புத்தர் சிலையாகும். இந்த நடவடிக்கை, கலாசார பாரம்பரியத்தை பாதுகாப்பதில் இந்தியா - அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது.
பழம்பொருள் கடத்தல்காரர் சுபாஷ் கபூர் மற்றும் தண்டனை பெற்ற கடத்தல்காரர் நான்சி வீனர் ஆகியோருடன் தொடர்புடைய சர்வதேச கடத்தல் கும்பலிடம் தொடர் விசாரணைகளின் மூலம் இந்தப் பழமையான சிலைகள் மீட்கப்பட்டன.
'' திருடப்பட்ட கலைப்பொருட்கள் மற்றும் சிலைகளை மீட்டு தாயகம் கொண்டுவரும் முயற்சிகள் தொடரும் என மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் எல் பிராக் ஜூனியர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து (4)
Vaithi - ,இந்தியா
30 ஏப்,2026 - 17:38 Report Abuse
சி பி ஐ விசாரிக்க வேண்டும் 0
0
Reply
Ramesh Trichy - ,இந்தியா
30 ஏப்,2026 - 13:47 Report Abuse
நம் நாட்டில் இந்த சிலைகளுக்கு மதிப்பும் இல்லை, மீண்டும் பூட்டி வைக்கப்படும். வெளி நாட்டில் அருங்கட்சியத்தில் இருந்தால் நம் நாட்டின் கலாச்சாரம் மற்றும் கலை திறமை வெளிப்படும். 0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
30 ஏப்,2026 - 11:33 Report Abuse
தயவு செய்து அந்த சிலைகளை தலீபான் நாட்டுக்கு அனுப்பாதீர்கள் அந்த சிலைகள் மீண்டும் திருடப்படும் 0
0
Reply
ஆரூர் ரங் - ,
30 ஏப்,2026 - 10:25 Report Abuse
தீய முக ஆட்சியிடம் ஒப்படைப்பதற்கு பதில் பருத்தி மூடை கோடவுனிலேயே இருக்கலாம். ஏனெனில் அறநிலையத்துறை ஆவணங்களிலுள்ள ஆயிரக்கணக்கான ஆலயங்களையே காணோம். லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் காணோம். 0
0
Reply
மேலும்
-
(ரெசிபி) முட்டையில்லா சாக்லேட் பனானா கேக்
-
ரெசிபி 1 – ஆந்திர ஸ்டைல் கோங்கரா பச்சடி
-
(ரெசிபி–2) கிராமத்து ஸ்டைல் ஆட்டுக்கறி வறுவல்
-
(டிட் பிட்ஸ்) மைக்ரேன் பிரச்னைக்கு தீர்வு என்ன?
-
(டிட் பிட்ஸ்) பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய முக்கிய பரிசோதனைகள்
-
(டிட் பிட்ஸ்) வெய்யிலில் நம்மை காத்துக் கொள்ள செய்ய வேண்டியவை
Advertisement
Advertisement