பெங்களூருவில் வெளுத்து வாங்கும் மழை; ஆறுகளாக மாறிய சாலைகள்; 24 மணி நேரத்தில் 8 பேர் பலி
நமது நிருபர்
பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஆறுகளாக மாறின; கடந்த 24 மணி நேரத்தில் மழை காரணமாக 8 பேர் பலியாகினர்.




சாந்திநகர், சிவாஜி நகர், எம்.ஜி.ரோடு, விதான் சவுதா, ஹலசூரு கேட், சதாசிவநகர் உட்பட நகர் முழுதும் கனமழை கொட்டி தீர்த்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சூறாவளி காற்றுடன் பெய்த கனமழைக்கு, மரங்கள் வேரோடு சாய்ந்தன. விதான் சவுதா நுழைவாயில் பகுதியிலும், தரை தளத்திலும் தண்ணீர் தேங்கியது. எம்.ஜி.ரோட்டில் உள்ள நுாலகத்திற்குள் தண்ணீர் புகுந்ததால், 5,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் நனைந்தன.
சிவாஜி நகரில், பவுரிங் அரசு மருத்துவமனை உள்ளது. கனமழையால் இதன் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், சுவரை ஒட்டியுள்ள நடைபாதையில் அமர்ந்து, வியாபாரம் செய்த வியாபாரிகள், சுவர் அருகில் நின்றிருந்த மூன்று குழந்தைகள் என, 11 பேர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். போக்குவரத்து சேவைகள் பாதித்ததோடு, வாகனங்கள் சிலவும் சேதமடைந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
8 பேர் பலி
நகரம் முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களில், இதுவரை 8 பேர் உயிரிழந்தனர். இவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்தார். இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement