ராஜஸ்தானில் பயங்கரம்; ஓடும் காரில் பற்றிய தீயில் 5 பேர் உடல் கருகி பலி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சாலையில் ஓடிக் கொண்டிருந்த காரில் திடீரென பற்றிய தீயில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்றிரவு அல்வார் மாவட்டத்தில் டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் உள்ள மௌஜ்பூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. ஓடும் காரில் பற்றிய தீ மளமளவென கார் முழுவதும் பரவியது. இதில், காரில் பயணித்தவர்கள் உடனே வெளியேற முடியவில்லை. இதனால், கார் முழுவதும் எரிந்து சாம்பலானது. இதில், 5 பேர் இருக்கையில் அமர்ந்தபடி, உடல்கருகி உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி வரும் போது இந்த விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.