காரைக்குடியில் ‛செட்டிநாட்டு சந்தை' : மே 16, 17 ல் கண்காட்சி
சிவகங்கை:காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் நகரத்தார் மகளிர் சங்கம் சார்பில் ‛செட்டிநாட்டு சந்தை' இரண்டு நாள் கண்காட்சி நடைபெற உள்ளது. காரைக்குடி பகுதிக்குட்பட்ட செட்டிநாட்டு பகுதிகளில் பாரம்பரிய பங்களாக்கள் பிரசித்தி பெற்றவை. இவை தவிர இங்கு தயாரிக்கப்படும் செட்டிநாடு காட்டன், சிந்தட்டிக் சேலைகள், ஆன்டிக் ஜூவல்ஸ், பாரம்பரிய செட்டிநாட்டு பலகாரம், மரச்சாமான்கள், வெள்ளி, வெண்கல பாத்திரங்கள், பீங்கான் பொருட்கள், ஓலை கொட்டான்கள் என பிரசித்தி பெற்ற பொருட்கள் ஏராளமாக உள்ளன.
இந்த பொருட்களின் அவசியத்தை உணர வைக்கும் விதமாக இரண்டு நாட்கள் (மே 16, 17) காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் ‛செட்டிநாடு சந்தை' கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சிக்கு நுழைவு கட்டணம் இல்லை. காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறும். இதில் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும். குறைந்தது ஒரு பொருளின் விலை ரூ.10 முதல் அதிகபட்சம் ரூ.லட்சம் வரையிலான பொருட்கள் கண்காட்சியில் இடம் பெறும். நகரத்தார் மகளிர் சங்க நிர்வாகிகள் செட்டிநாட்டு சந்தைக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ///