கண்டரமாணிக்கம் திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவு
திருப்புத்துார்,மே1-
கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா நிறைவை முன்னிட்டு தீர்த்தவாரியும், இரவில் பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது.
இக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.,21ல் காப்புக்கட்டுதலுடன் விழா துவங்கி, தினசரி காலையில் வெள்ளிக் கேடகத்தில் அம்மன் புறப்பாடும், இரவில் வாகனங்களில் திருவீதி உலாவும் நடந்தது.பத்தாம் நாளை முன்னிட்டு காலையில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.பின்னர் உற்ஸவ அம்மன் திருவீதி வலம் வந்து பிள்ளையார் குண்டு ஊருணி எழுந்தருள தீர்த்தவாரி நடந்தது.
ஊருணியை வலம் வந்த அம்பாள் கோயிலில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். இரவில் பூப்பல்லக்கில் எழுந்தருளிய அம்மன் திருவீதி வலம் வந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement