மஞ்சுவிரட்டு 25 பேர் காயம்
திருக்கோஷ்டியூர்,மே1-
கண்டரமாணிக்கம் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டில் மாடு குத்தியதில் 25 பேர் காயமடைந்தனர்.
மாணிக்கநாச்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு நாளன்று நாட்டார் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். நேற்று காலை கோயிலில் அம்மன் வழிபாடு முடிந்த பின்னர், காலை 11:00 மணி அளவில் 200க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டன. காலை முதல் வயல்களில் கட்டுமாடுகளும் அவிழ்க்கப்பட்டன. மாடுகள் முட்டியதில் 25 பேர் காயமடைந்தனர். தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய ஏற்பாட்டாளர்கள் மீது திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement