டிஜிட்டல் இந்தியா புதிய சாதனை; யுபிஐ பரிவர்த்தனை ரூ.314 லட்சம் கோடியைத் தாண்டியது
நமது நிருபர்
இன்றுடன் பத்தாண்டுகளை நிறைவு செய்துள்ள யுபிஐ பணப்பரிவர்த்தனை முறை, டிஜிட்டல் இந்தியாவின் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. 2025-26 நிதியாண்டில் மட்டும் யுபிஐ பரிவர்த்தனை ரூ.314 லட்சம் கோடியைத் தாண்டியது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: யுபிஐ அறிமுகமாகி 10ஆண்டுகள் நிறைவு அடைந்து, உலகின் மிகப்பெரிய பணப்பரிவர்த்தனைத் தளமாக உருவெடுத்து, இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்குத் தூணாக விளங்குகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் பரிவர்த்தனைகள் 12,000 மடங்கு உயர்ந்துள்ளது. 2025-26ம் நிதியாண்டில், ரூ.314 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 700க்கும் மேற்பட்ட வங்கிகள் யுபிஐ வசதிகளை பயன்படுத்துவதால், பணப்பரிவர்த்தனைகளில் கிட்டத்தட்ட 49 சதவீதம் யுபிஐ வாயிலாக தான் நடக்கிறது.
2016-17 நிதியாண்டில் வெறும் 2 கோடியாக இருந்ததிலிருந்து, 2025-26 நிதியாண்டில் 24,162 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகளாக உயர்ந்துள்ளது. பரிவர்த்தனை மதிப்பு 2016-17 நிதியாண்டில் ரூ.0.07 லட்சம் கோடியிலிருந்து 2025-26 நிதியாண்டில் 314 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய விரைவான பணம் செலுத்தும் வழியாக யுபிஐ முறையை ஐஎம்எப் அங்கீகரித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Undoubtedly its a remarkable achievement.
But the nagging part is that while roadside eateries do accept digital payments, traders in mint street still want cash. God alone should know the reasonமேலும்
-
மே 2வது வாரத்தில் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு
-
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு; இந்திய வானிலை மையம்
-
தவறை தட்டி கேட்டது தவறா? மனைவி, மகள் கண் முன் பயணியை அடித்து அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் அராஜகம்
-
பிளாஸ்டிக் குடம் விற்பனை அதிகரிப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது; இன்றைய நிலவரம் இதோ!
-
ஓட்டு எண்ணும் மையத்தில் மம்தா கட்சி வேட்பாளர்கள் தர்ணா; தேர்தல் ஆணையம் சொல்வது இதுதான்