வரதராஜ பெருமாள் கோவில் தோராட்டம்

பண்ருட்டி: வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ திருத்தேர் உற்சவத்தில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த ஏப். 22 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் காலை உற்சவருக்கு சிறப்பு திரு மஞ்சனம் நடந்தது.

உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக உள்புறப்பாடு, மாலையில், இந்திர விமானம், சந்திரபிரபை வாகனம், அனுமந்த வாகனம், சேஷவாகனம், கருடவாகனம், யானை வாகனம், திருப்பல்லக்கு உற்சவம், குதிரை வாகன புறப்பாடு நடந்தது.

நேற்று காலை 5:30 மணிக்கு திருத்தேரில் உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி,பூமிதேவி சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

காலை 6:00 மணிக்கு திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். வ.உ.சி தெரு, காந்தி சாலை, ராஜாஜி சாலை வழியாக சென்று ராஜாஜி சாலையில் உள்ள திருத்தேர் நிறுத்துடமிடத்தில் காலை 7:25 மணிக்கு திருத்தேர் வந்தடைந்தது. மாலை உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

விழாவில் நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் சண்முகம், வியாபாரிகள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், ராஜேந்திரன், அ.தி.மு.க., வேட்பாளர் மோகன், வள்ளி விலாஸ் உரிமையாளர் சரவணன், எஸ்.ஜி.ஜூவல்லர்ஸ் உரிமையாளர்கள் வைரக்கண்ணு, அருள், நிஷாந்த், முரளி ஜீவல்லரி முரளி, பகவதி கேஷ்யூஸ் நரேஷ்சந்த், தியாகு ஜீவல்லரி கஜபதி, ஜெ.கே.ஆர்.டெக்ஸ் ரமேஷ்காந்தி, ஐஸ்வர்யா ேஹாம்நீட்ஸ் ராஜ்மோகன், மீனா ஜீவல்லரி தேவராஜன், முன்னாள் துணை சேர்மன் விஜயரங்கன், வசந்தபவன் ஆறுமுகம், ஆடிட்டர் தியாகராஜன், விமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Advertisement