பெரியநாயகி அம்மன்  கோவில் கும்பாபிேஷகம் 

பெண்ணாடம்: பெண்ணாடம் பெரியநாயகி அம்மன் உடனுறை பெரியாண்டவர் சுவாமி கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.

இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், முதல் கால யாகபூஜை, தீபாராதனை நடந்தது.

நேற்று காலை 6:30 மணியளவில் கோபூஜை, விக்னேஸ்வர பூஜை, 9:30 மணியளவில் கடம் புறப்பாடு, 10:00 மணியளவில் மூலவர் சுவாமிகள் பெரியநாயகி, பெரியாண்டவர் சுவாமி கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.

தொடர்ந்து, பிரகாரத்தில் உள்ள கருப்பண்ணசாமி, பாவாடைராயன், நாகம்மாள் சுவாமி சிலைகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement