கோயில் திருவிழா

மூணாறு, மே 3

மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட், லோயர் டிவிஷனில் ராஜகாளியம்மன் கோயில் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. காலையில் பால்குடம் எடுத்து வரப்பட்டு விநாயகர், ராஜகாளியம்மன் உள்பட பல்வேறு தெய்வங்களுக்கு அபிஷேகம், தீபாரதனை, பூஜைகள் ஆகியவை நடந்தன. அதனை வார்டு உறுப்பினர் கருப்பசாமி துவக்கி வைத்தார். மாலையில் தீர்த்தம் மற்றும் தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். இரவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் குமார், செல்வமணி, முருகன் ஆகியோர் செய்தனர்.

Advertisement