மணலுாரில் கழிவு நீர் அகற்றம்
திருப்புவனம்:தினமலர் செய்தி எதிரொலியாக மணலுாரில் மே 2 ஆம் தேதி தெருக்களில் தேங்கிய கழிவு நீர் அகற்றப்பட்டு ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.
திருப்புவனம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பாலான கிராமங்களில் கழிவு நீர் வாய்க்கால் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தெருக்களில் தேங்கி சுகாதார கேடு நிலவி வருகிறது. திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் 45 ஊராட்சிகளை சேர்ந்த 173 கிராமங்கள் உள்ளன. கிராமங்களுக்கு தேவையான குடிநீர், மருத்துவம், கழிவு நீர் வாய்க்கால் உள்ளிட்ட எந்தவித வசதிகளும் கிராமப்புறங்களில் ஏற்படுத்தப்படவில்லை. திருப்புவனம் அருகே மணலுாரில் தெருக்களில் கழிவு நீர் தேங்கி சுகாதார கேடுவி நிலவி வருவதாக தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது இதனையடுத்து அதிகாரிகள் கழிவு நீரை அகற்றி ப்ளீச்சிங் பவுடர் துாவி சுத்தம் செய்தனர்.
மேலும்
-
திரிணமுல் கட்சிக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு; ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து
-
சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்கள் வறண்டன:கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் தவிப்பு
-
'பேட்மேன்' முருகானந்தம் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை!
-
ஓட்டு எண்ணும் மையத்தின் பிற வழிகள் அடைப்பு
-
வரட்டுபள்ளத்தில் 9.60 மி.மீ., மழை
-
8 தொகுதியில் களத்தில் உள்ள 118 வேட்பாளர்