பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
புதுச்சத்திரம்: ரெட்டியார்பேட்டை கேசவ பெருமாள் கோவிலில், திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி, கடந்த 27 ம் தேதி காலை 5:00 மணிக்கு லஷ்மி ஹோமம், திருமஞ்சனம், கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை, 7:00 மணிக்கு சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. தொடர்ந்து, 28 ம் தேதி மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை நடந்தது.
29 ம் தேதி மாலை 6:00 மணிக்கு லட்சுமி நரசிம்மர் அவதாரத்தில் சுவாமி வீதி உலா, 30 ம் தேதி மாலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மகாதீபாராதனை நடந்தது.
சிறப்பு விழாவான திருக்கல்யாணம் மே 1 ஆம் தேதி நடந்தது. அதையொட்டி மாலை 3:00 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 8.00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத கேசவ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. மே 2 ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, சுவாமி வீதி உலா நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்தனர்.
மேலும்
-
எஸ்.பி.ஜி.,க்கு நன்றி சொன்ன பிரதமர்!
-
மின் விளக்குகள் ஒளிராத அண்ணா நுாற்றாண்டு பூங்கா மாநகராட்சி தி.மு.க., வசம் இருந்தும் பராமரிப்பில்லை
-
பாதியில் கைவிடப்பட்ட புதுநகர் சாலை பணியை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
-
கரூர் சம்பவத்தில் விஜய் குற்றமற்றவர்
-
போலீஸ் செய்திகள்: தேனி
-
விவசாயத்தில் ஆண்டுதோறும் பல லட்சம் சம்பாதிக்கும் பசவரெட்டி ராயரெட்டி