தோல்வி பயத்தால் திமுக மிரட்டல்; தவெக புகார்
சென்னை: தோல்வி பயம் காரணமாக திமுக எங்களை மிரட்டி வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் மனு அளித்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா புகார் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான ஓட்டுகள், நாளை மறுநாள் (மே 4) எண்ணப்பட இருக்கிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளரும், வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளருமான ஆதவ் அர்ஜுனா, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து கடிதம் ஒன்றை அளித்தார்.
அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது;
தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கையின் போது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக, அண்மையில் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள தவெக தேர்தல் பிரசார அலுவலகத்திற்கு தீ வைத்து நாசமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அமைதியான ஓட்டு எண்ணிக்கையை கெடுக்கும் விதமாக, வன்முறை செயல்களில் ஈடுபட சமூக விரோதிகள் சதித்திட்டம் தீட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே, தமிழகத்தில் உள்ள 62 ஓட்டு எண்ணும் மையங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும். ஓட்டு எண்ணும் மையங்களைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குப் பொது மக்கள் கூடுவதைத் தடுத்து, ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்க வேண்டும். வேட்பாளர்கள் மற்றும் முகவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கைகள் அவசியம், இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களிடம் பேசுகையில்,"தோல்வி பயம் காரணமாக திமுக எங்களை மிரட்டி வருகிறது. அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களில், அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட முகவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும். ஓட்டு எண்ணும் மையங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களை கேட்டு, திமுகவினர் வன்முறையில் ஈடுபடலாம். ஓட்டு எண்ணிக்கை நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும். மேலும், ஸ்ரீரங்கத்தில் தவெக அலுவலகத்திற்கு தீவைத்த நபரை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்," இவ்வாறு அவர் கூறினார்.
ஏண்டா... நீதான்டா போன மாசம் சொன்ன... “பாரு... தேர்தல் தேதி அறிவிச்ச உடனே... ஸ்டாலின் ஆட்சி இல்ல... தேர்தல் ஆணையத்தின் ஆட்சி... அன்னைக்கு தமிழ்நாடு முழுவதும 234 தொகுதிகளிலும் தெரு தெருவா... ரோடு ரோடா... விஜய் நகர்வலம் வருவாரு...ன்னு சொன்னியடா.... “குண்டு சட்டியில் குதிரை ஓட்டுன மாதிரி” சென்னையில் உள்ள 16 தொகுதியில் 11 மணி முதல் 4 மணி வரை பிரச்சாரம் பண்ணாரு... வெளியூரில் ஒரு 5, 6 தொகுதிக்கு போனாரு...? அப்ப... 234 தொகுதியில் 20 தொகுதியைத் தவிர மற்ற 214 தொகுதி ஆந்திராவுல இருக்கா, இல்ல கர்நாடகாவுல இருக்கா... தமிழ்நாட்லதான்டா இருக்கு... ஏண்டா உங்க அண்ணன் போகலை... உன் வாயத் தொறந்தர் பொய்யா வந்து விழுகுது.
பாவம் யாரும் கொஞ்சமாச்சும் ஆறுதல் சொல்லலை போல..
அதனால் தான் தேர்தல் ஆணையரிடம் மனு கொடுத்து இருக்காங்க... திமுகாவில் உள்ள உன்னை போன்ற குண்டர்கள் வன்முறையை கட்டவிழ்த்து விட பார்க்கிறார்கள் என்று புகார் கொடுத்து இருகார்...
க உ பி ங்க எப்பவுமே அடுத்தவன் பொய்யை பத்தி வாய் கிழிய பேசுவானுங்க. ஊளையிடுவானுங்க.முகஸ் பொய்யை பத்தி வாயை திறக்க மாட்டானுங்க. தப்பி தவறி திறந்துட்டா திறந்தவனுக்கு ஆப்பு அடிச்சிடுவானுங்க. க உ பிங்க ஆப்பசைச்ச குரங்கு மாதிரி மாட்டிகிட்டு இருக்கானுங்க.
அப்பப்பா என்னா உருட்டு போதும்டா ப்பா உன் ரீல் அறுந்து ரொம்ப நாள் ஆச்சு ஒட்டு எண்ணுறத எல்லாம் தேர்தல் ஆணையம் பாத்துக்கும் அவுங்களுக்கு நீ பாடம் எடுக்காத
சரி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தள்ளி நிறுத்த வேண்டும்னு சொல்ற.... உன் டிவிகே தொண்டன் சொன்னா கேப்பானா...? மொதல்ல அவன்கிட்ட சொல்லிட்டு அப்புறம் ஊருக்கு உபதேசம் பண்ணு.... வேளாங்கண்ணி கோவிலுக்கு விஜய் போறார்னு கேள்விபட்ட உடனே... உன் கட்சி தற்குறிக் கூட்டம் அசோக வனத்தை அழித்ததைப் போல “கிஷ்கிந்தா சேனைகளாக” மாறி... வேளாங்கண்ணி கோவில் கம்பி, ஜன்னல் மேலேயெல்லாம் இன்னைக்கே போய் தொங்கிட்டு நிக்குதுங்க.. உன் கூட்டத்தை கட்டுப்படுத்து... அப்புறம் மத்தவங்கள நிக்க சொல்லு
பேச மைக் கெடச்சுசுன்னு என்ன என்னமோ பேசாத, 2 நாள்ல உன் லட்சணம் தெரிஞ்சிரும்
பொறு இன்னும் , இரண்டே நாள் தான் . தோல்வி தயாரா இருக்கு தற்குறிகளுக்கு
பாஸ் உன்னோட முன்னாள் தலீவர் இப்போ தான் சொன்னான் தீமுக கூட்டணி 220 சீட் வெற்றி பெரும்னு
வாங்குன காசுக்கு மேல கூவறான்டா இவன் இவனுகளுக்கு கொட்டாவி விக்கல் வாந்தி வந்தாலும் சளி பிடித்தாலும் காரணம் திமுக மட்டுமே யாரு பெத்த புள்ளையோ பாவம் இப்படி உளறிகிட்டு திரியிது
லாட்டரி சீட்டு
அப்படி கூறுவது உங்கள் வேலை.... Yaarukku தும்மல் வந்தாலும்.... அதற்கு காரணம் பிஜேபி என்று கூறுவீர்கள்.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை அன்று யாருக்கு என்ன நடந்தாலும் உமக்கு படுதோல்வி கிடைப்பது உறுதி
உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா ??