சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பெண்கள் பால்குட ஊர்வலம்
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி பழையபேட்டை மலையப்ப சீனி-வாச பெருமாள் கோவிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, கடந்த இரு நாட்களாக உலக நன்மை வேண்டி மஹா சுதர்சன யாக வேள்வி நடந்தது. நேற்று ஐந்தாம் கால யாக வேள்வி, மஹா பூர்-ணாஹூதி, கடம் புறப்பாடு, உலக நன்மை வேண்டுதலுடன், 50க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்களை ஊர்வலமாக கொண்டு சென்-றனர். இதில், பூசாரிகள் சுவாமியை சுமந்தும், பக்-தர்கள் ஈசன், பார்வதி வேடம் அணிந்தும் நேர்த்-திக்கடன் செலுத்தினர்.
பால் குடங்களை ஊர்வலமாக கொண்டு சென்று சுவாமிக்கு அபிேஷகம் செய்து வேண்டுதல் நிறைவேற்றினர். தொடர்ந்து மஹா மங்கள ஆரத்தி, தீர்த்தப்பிரசாதம் வழங்குதல் மற்றும் ஏராளமான பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை நடந்தது. மாலை, 4:00 மணிக்கு ஸ்ரீஞான சக்தி தெய்வீக கலை குழுவினரின் பக்தி கலை நிகழ்ச்சி நடந்தது. மேலும், மலையப்ப சீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார் மற்றும் அங்-காளபரமேஸ்வரி அம்மன், சிவபெருமான், விநா-யகர், முருகர் உற்சவர் திருவீதி உலா நடந்தது.