விஜய் வருகை ரத்து: வேளாங்கண்ணியில் காத்திருந்தோர் ஏமாற்றம்

40

நமது நிருபர்




தவெக தலைவர் விஜய் வருவார் என்று எதிர்பார்த்து நேற்று நள்ளிரவு முதல் 3000க்கும் மேற்பட்டோர் வேளாங்கண்ணி தேவாலயம் முன் திரண்டு இருந்தனர். சுற்றுப் பகுதிகளில் இருக்கும் வீடுகள் கடைகள் மொட்டை மாடிகளில் விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். அவ்வப்போது டிவிகே டிவிகே என்று கோஷம் எழுப்பியபடியும் இருந்தனர்.


மூன்று மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.ஏராளமானோர் ஒன்று திரண்டதால் தேவாலயத்திற்கு வழக்கமான வழிபாட்டுக்கு வந்தவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்நிலையில் விஜய் வருகை ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. காலை 5: 20 மணிக்கு தேவாலயம் சார்பில் ஒலிபெருக்கியில் இது பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

விஜய் வந்தால் அவருடன் இணைந்து வழிபாட்டில் அனைவரும் பங்கேற்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அவர் வருவது பற்றி தங்களுக்கு எந்த விதமான தகவலும் இல்லை. எனவே வழிபட வந்த பக்தர்களுக்கு இடையூறு செய்யாமல் இருக்கும்படி தேவாலய நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது. இதன் பிறகு விஜய் ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Advertisement