கொடைக்கானலுக்கு சுற்றுலா போறீங்களா; 2 நாட்களுக்கு கட்டணம் இல்லை

3

நமது நிருபர்



கோடை விடுமுறை என்பதால், கொடைக்கானலில் பிரபல சுற்றுலா இடங்களுக்கு எந்த நுழைவு கட்டணமும் இல்லாமல் இரண்டு நாட்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.


இது குறித்து திண்டுக்கல் கலெக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை: கொடைக்கானலில் தற்பொழுது கோடை கால தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், சுற்றுலா தளங்களை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சிறப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று மே 2 (சனிக்கிழமை), மே 3 ( ஞாயிறு) ஆகிய 2 நாட்களும் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தளங்களான தூண் பாறை, குணா குகை, பைன் மர காடுகள், மோயர் சதுக்கம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு சென்று பார்வையிட 2 நாட்களுக்கு கட்டணமின்றி செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement