தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு; வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்வு

1


சென்னை: சென்னையில் இன்று (மே 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து 14 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 30), ஆபரண தங்கம் கிராம் 14,100 ரூபாய்க்கும்; சவரன் 1,12,800 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 270 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய நிலவரம்



நேற்று (மே 01) காலை, தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 14,050 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 400 ரூபாய் சரிவடைந்து 1,12,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 265 ரூபாய்க்கு விற்பனையானது.

நேற்று மாலை, மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு 130 ரூபாய் குறைந்து 13,920 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 1,040 ரூபாய் சரிவடைந்து, 1,11,360 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

இன்றைய நிலவரம்




இந்நிலையில் இன்று (மே 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து 14 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி நிலவரம்



வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 270 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Advertisement