மேற்குவங்கத்தில் மறு ஓட்டுப்பதிவு முதல் சென்னை vs மும்பை பலப்பரீட்சை வரை; இன்று ( மே 2) முக்கிய நிகழ்வுகள்!
நமது நிருபர்
தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (மே 2) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?
அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.
* சென்னை-மும்பை இடையிலான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி இன்றிரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. கட்டாய வெற்றிக்கான தேவையுடன், முன்னாள் சாம்பியன்களான இரு அணிகளும் மோதுகின்றன.
* வேளாங்கண்ணி தேவாலயத்துக்கு இன்று விஜய் வருவார் என அதிகாலை 3 மணி முதல் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். விஜய் வருகை ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
* தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது; ஓட்டு எண்ணிக்கைக்காக தேர்தல் கமிஷன் நியமித்துள்ள பார்வையாளர்கள் இன்று தமிழகம் வருகின்றனர்.
* மேற்குவங்கத்தில் டைமண்ட் ஹார்பர், மக்ராஹத் பசீம் தொகுதிகளுக்கு உட்பட்ட 15 ஓட்டுச்சாவடிகளில் இன்று மறு ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. ஓட்டுப்பதிவு இயந்திரம் சேதப்படுத்தப்பட்டதாக எழுந்த புகார்களை அடுத்து தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
* சென்னையில் இன்று வெப்ப நிலை 104 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டும்; அதிகபட்ச வெப்ப நிலையால் அசவுகரியமான சூழல் நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
* திண்டுக்கல், தேனி, திருப்பூர், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
* நடிகர்கள் வியாபாரத்தில் பங்கு என்ற அடிப்படையில் சம்பளம் வாங்க வலியுறுத்தி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இதனால் 35க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.
வாசகர் கருத்து (2)
Iyer - Karjat,இந்தியா
02 மே,2026 - 13:35 Report Abuse
2021 ல் WB ல் மூன்று அடாவடித்தனங்கள் செய்து TMC ஜெயித்தது.
1. SOURCE JAMMING : TMC தவிர வேறு கட்சிக்கு வோட்டு போடுவார்கள் என்று சந்தேகித்த நபர்களை வீட்டிற்கு வெளியே கிளம்ப விடாமல் - அவர்களின் ஓட்டுக்களை TMC குண்டர்கள் கள்ளத்தனமாக பதிவு செய்தார்கல்
2. BOOTH JAMMING : ஒட்டு அளிக்கும் BOOTH ல் TMC குண்டர்கள் மற்ற கட்சிகளின் AGENT ஐ வரவிடாமல்- எல்லா வோட்டுக்களையும் TMC பெயரிலேயே பதிவு செய்தார்கள்
COUNTING MANIPULATION: ஒட்டு எண்ணிக்கை செய்யும் இடங்களில் TMC குண்டர்கள் சட்டவிரோதமாக புகுந்து எண்ணிக்கையில் கோல்மால் செய்தனர்.
இந்த முறை - 2026 ல் - மேற்க்கூறிய 1 & 2 கள்ளத்தனைகளை செய்யவிடாமல் ECI நடவடிக்கை வெற்றிகரமாக எடுத்தது
இப்போது - ஒட்டு எண்ணிக்கையின்போது கள்ளத்தனம் நடக்கவிடாமல் - வெளிமாநில OFFICER கல் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆகையால் TMC எந்தவிதமான கள்ளத்தனம் செய்யமுடியாமல் ECI நடவடிக்கை எடுத்துவிட்டது
TMC - இந்தமுறை 50 சீட்டுக்கள் பெற்றாலும் ஆச்சர்யம்தான்.
BJP 225 சீட்டுவரை பெற்றாலும் ஆச்சர்யம் இல்லை. 0
0
Reply
தங்கமணி - ,
02 மே,2026 - 11:35 Report Abuse
மேற்குவங்கத்தில் மம்தா ஆட்சி அகற்றப்பட வேண்டும் 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement