விந்து சுரப்பியில் புற்றுநோய் தரணில் குணமான நோயாளி
சேலம்: சேலம் தரண் மருத்துவமனைக்கு, 51 வயது மதிக்கத்தக்க ஒருவர், விந்து சுரப்பி(புராஸ்டேட்) வீக்க சிகிச்சைக்கு வந்தார். அவரை பரிசோ-தனை செய்ததில், விந்து சுரப்பியில் புற்றுநோய் பாதிப்பு இருந்-தது கண்டுபிடிக்கப்பட்டது. உயர் பரிசோதனையில், புற்றுநோய் வேறு எங்கும் பரவவில்லை என உறுதியானது.
இதை முழுமையாக குணப்படுத்த வாய்ப்பு இருந்ததால் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின் இரு நாட்களில் அவர் வீடு திரும்பினார். இந்த அறுவை சிகிச்-சையை, தரண் மருத்துவமனையின் சிறுநீரக புற்றுநோய் பிரிவை சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர்கள் அர-விந்தன், இன்பரசன், குமரேசன் மற்றும் மயக்கவியல் நிபுணர்
கிருஷ்ணகுமார் ஆகிய குழுவினர் மேற்கொண்டனர்.
இதுகுறித்து தரண் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் தரணீஷ் கூறியதாவது: ரோபோட்டிக் அறுவை சிகிச்சையில் உடலின் திசுக்-களை நாம் இயற்கையாக கண்களில் காண்பதை விட, 10 மடங்கு பெரிதாக காண முடியும். இதனால் அறுவை சிகிச்சையை துல்லி-யமாக மேற்கொள்ள முடிந்தது.
மேலும் தரண் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிநவீன மருத்துவ உபக-ரணங்கள் மூலமும், ரோபோடிக் இயந்திரம் மூலமும் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மக்கள் நலன் கருதி உயர்தர ரோபோடிக் அறுவை சிகிச்சை, குறைந்த செலவில் மேற்கொள்-ளப்படுவதால் மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
மதுரையில் இருவர் உடல் மீட்பு; போலீசார் விசாரணை
-
மத்திய பார்வையாளர்களுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை; நாளை ஓட்டு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரம்
-
சொல்கிறார்கள் – அவள் விகடன், ஏப்., 21, 2026, பக்: 38 – திறமை மற்றும் தரத்தால் வெற்றி!
-
தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும்; பீயூஷ் கோயல் நம்பிக்கை
-
நமஸ்தே... மேரா பாபா மர்கயா!
-
டில்லியில் தீ விபத்து; 9 பேர் உயிரிழப்பு