தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும்; பீயூஷ் கோயல் நம்பிக்கை
நமது நிருபர்
தமிழகத்தில் பெரும்பான்மை பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும் என மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் பீயூஷ் கோயல் கூறியதாவது: தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, உறுதியான வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதில் சந்தேகம் இருந்திருந்தால் டில்லியிலிருந்து, இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன். தமிழகத்தில் பெரும்பான்மை பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும்.
இந்த முறை தமிழகத்தில் மாற்றம் வரும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்கள் வளர்ச்சியை விரும்புகிறார்கள். பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா முழுவதும் வளர்ச்சி பெற்று வருகிறது. தமிழகமும் அதில் பங்கு பெற வேண்டும். தமிழக மக்கள் அதிகாரம் கொடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு பீயூஷ் கோயல் தெரிவித்தார்.
. சரீ, அந்த கூட்டணி ஆட்சியிலே இருக்கா இல்லை, எல்லா கட்சியிலேருந்தும் எம்எல்ஏ க்களை மொத்த விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்க போறீங்களா?
எதிர்கட்சி காரங்க திமுக ஜெயிக்க கூடாது...
கூட்டணி கட்சிக்காரனுக்கு
திமுக தனித்து ஆட்சி அமைச்சுட கூடாது...
எதிர்ப்பு துரோகம் இதையெல்லாம் கடந்துதான் திமுக இன்னும் வலுவுடன் பயணித்து கொண்டிருக்கிறது
பயணிக்கும்... ஸ்டாலின் தொடருவார் தமிழகம் வெல்லும்
எத்தகைய சூழ்நிலையிலும் திமுக போராடும் திமுக வெல்லும்
அடுத்த ஐந்து வருடங்களுக்கு த.வெ.க எதிர்கட்சியாகவும் தி.மு.க அதற்கு அடுத்த நிலையிலும் இருந்து போராடும்.
கனவில் சொல்வது போல் எனக்கு தெரிகிறது
பெரும்பான்மையினும் சொல்லாதீங்க.. ஆனால் ஆட்சி அமைக்கும். தி.மு.க மண்ணை கவ்வும்.
நடக்கும்மேலும்
-
மதுரையில் இருவர் உடல் மீட்பு; போலீசார் விசாரணை
-
மத்திய பார்வையாளர்களுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை; நாளை ஓட்டு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரம்
-
சொல்கிறார்கள் – அவள் விகடன், ஏப்., 21, 2026, பக்: 38 – திறமை மற்றும் தரத்தால் வெற்றி!
-
நமஸ்தே... மேரா பாபா மர்கயா!
-
டில்லியில் தீ விபத்து; 9 பேர் உயிரிழப்பு
-
தயாரிப்பாளர் சங்கம் 'ஸ்டிரைக்'; படப்பிடிப்புகள் பாதிப்பு