விவசாயத்தில் ஆண்டுதோறும் பல லட்சம் சம்பாதிக்கும் பசவரெட்டி ராயரெட்டி
இப்போதெல்லாம் பல விவசாயிகள், விவசாயத்தை விட்டு வேறு பணிக்கு செல்லும் நிலையில், கதக் மாவட்டம் நகர்குந்த் தாலுகாவின் அரிஷ்ணகோடியை சேர்ந்த விவசாயி பசவரெட்டி ராயரெட்டி, 30 ஆண்டுகளாக, தன் 60 ஏக்கர் நிலத்தில் பாரம்பரியமாக விவசாயத்தில் ஈடுபட்டு, ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய்களை வருமானமாக ஈட்டி வருகிறார்.
இவரின், 60 ஏக்கர் நிலத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன் இரண்டு ஏக்கரில் பெரிய விவசாய குளத்தை அமைத்தார். தன் நிலத்துக்கு தேவைான உரத்துக்கு, மண்புழு உரம் தயாரிக்கிறார். இதற்காக, 34 அடி நீளமும், நான்கு அடி அகலமும் உடைய, ஒரு பெரிய இயற்கை உர உற்பத்தி குழியையும் அமைத்துள்ளார். கத்திரிக்காய், கொண்டைக்கடலை, சர்க்கரை வள்ளி கிழங்கு, வெண்டைக்காய் போன்றவற்றை தன் நிலத்தில் பயிரிட்டு உள்ளார்.
அரிஷ்ணகோடி கிராமத்தின் சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமங்களில், ஏக்கருக்கு, 33 குவிண்டால் என்ற விகிதத்தில், மொத்தம், 40 ஏக்கரில் 1,320 குவிண்டால் மக்காச்சோளம் உற்பத்தி செய்கிறார்.
அதேபோன்று ஏக்கருக்கு 10 குவிண்டால் வீதம், சூரியகாந்தி பயிரிட்டு, 200 குவிண்டாலுக்கும் அதிகமாக விளைச்சல் பெறுகிறார். சந்தையில் நியாயமான விலை கிடைக்காத போதும், 60 ஏக்கருக்கு 30 லட்சம் ரூபாய் வரை லாபம் பெறுகிறார்.
விவசாயத்துடன் பால் பண்ணையையும், துணை தொழிலாக செய்து வருகிறார். 18 பசுக்கள், எருமைகள் வளர்த்து வருகிறார். தினமும், 20 லிட்டருக்கும் அதிகமான பாலை உற்பத்தி செய்து, வருமானம் ஈட்டி வருகிறார்.
பி.யு.சி., முடித்து விட்டு, விவசாயம் செய்யத் துவங்கினார். தற்போது தன் மகன் ஹனும ரெட்டியையும், வேளாண்மையில் பட்டய படிப்பு படிக்க வைத்து, தன்னுடன் சேர்ந்து விவசாயம் பார்க்க வைத்துள்ளார்.
இதுகுறித்து பசவரெட்டி ராயரெட்டி கூறியதாவது:
முன்னர் விவசாயம், வருமானம் தரும் ஆதாரமாக இருந்தது. இன்றோ, அது ஒரு செலவு அதிகரிக்கும் ஆதாரமாக உள்ளது.
இன்று விவசாயத்தில் லாபம் ஈட்ட வேண்டும் என்றால், கூலி தொழிலாளர்களை மட்டுமே நம்பியிருக்க கூடாது. பண்ணை உரிமையாளர்கள் தினமும் கடினமாக உழைக்க வேண்டும். இதனாலேயே, என்னால் அதிக லாபம் ஈட்ட முடிகிறது.
விவசாயத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால், பெரும் வெற்றியை அடைய முடியும். என் மகனும் பண்ணையில் என்னுடன் சேர்ந்திருப்பது எனக்கு மேலும் உற்சாகத்தை அளித்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
மேலும்
-
சொல்கிறார்கள் – அவள் விகடன், ஏப்., 21, 2026, பக்: 38 – திறமை மற்றும் தரத்தால் வெற்றி!
-
தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும்; பீயூஷ் கோயல் நம்பிக்கை
-
நமஸ்தே... மேரா பாபா மர்கயா!
-
டில்லியில் தீ விபத்து; 9 பேர் உயிரிழப்பு
-
தயாரிப்பாளர் சங்கம் 'ஸ்டிரைக்'; படப்பிடிப்புகள் பாதிப்பு
-
நாடு முழுவதும் நீட் தேர்வு முதல் பொறியியல் படிப்பு கலந்தாய்வு விண்ணப்பம் துவக்கம் வரை; இன்று (மே 3) முக்கிய நிகழ்வுகள்!