எஸ்.பி.ஜி.,க்கு நன்றி சொன்ன பிரதமர்!
புதுடில்லி: மேற்கு வங்க தேர்தலின் இரண்டாவது மற்றும் கடைசி பிரசாரத்தை முடித்து, சிக்கிம் சென்ற பிரதமர் மோடி, இரு நாட்கள் அங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின், தன் தொகுதியான வாரணாசிக்கு சென்றார். அதன்பின், ஏப்., 29 இரவு டில்லி திரும்பினார். நான்கு நாட்கள் டில்லிக்கு வெளியே தங்கினார் பிரதமர்.
பிரதமருக்கு எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்கிறது. டில்லிக்கு வெளியே பிரதமர் தங்கும் போது, பாதுகாப்பு அளிப்பதில் பல பிரச்னைகள் உள்ளன. அதுவும், தேர்தல் நேரத்தில், 'ரோடு ஷோ' நடத்தும்போதெல்லாம், எஸ்.பி.ஜி.,யின் பாடு, படு திண்டாட்டம். இந்த நான்கு நாட்களிலும், எஸ்.பி.ஜி.,யின் வேலை மிகவும் கடினமாக இருந்ததாம்.
டில்லி திரும்பிய உடன், பிரதமர் மோடி செய்த ஒரு விஷயம், டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில் பாராட்டப்படுகிறது. எஸ்.பி.ஜி.,யின் தலைமை அலுவலகம், டில்லியில் உள்ள துவாரகாவில் அமைந்துள்ளது. இங்கு, எஸ்.பி.ஜி.,யில் பணிபுரியும், டிரைவர் உள்ளிட்ட, 4,500 பேருக்கும் பிரதமர் விருந்து அளித்தாராம்.
அப்போது, 'என்னை பாதுகாப்பதில், நீங்கள் எவ்வளவு பிரச்னைகளை சந்திக்கிறீர்கள் என்பது தெரியும். எனக்கு அரணாக இருந்து, நீங்கள் பாதுகாத்ததற்கு நன்றி. ஆண்டவனுக்கும் நன்றி' என, பிரதமர் பேசினாராம்.
இந்த விருந்தில் பங்கேற்ற அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி. இதுவரை, எந்த ஒரு பிரதமரும் எஸ்.பி.ஜி.,க்கு இப்படி விருந்து அளித்து, நன்றி தெரிவித்தது கிடையாதாம்.
இவர்களுடன், பிரதமரின் உதவியாளர்களும் இந்த விருந்தில் பங்கேற்றனர். பிரதமருக்கு ஐந்து தனிப்பட்ட உதவியாளர்கள் உள்ளனர். பிரதமர் எங்கு சென்றாலும், இவர்களும் உடன் செல்கின்றனர். பிரதமருக்கு தேவையான உடைகள் உட்பட பல விஷயங்களை இந்த ஐவர் தான் கையாளுகின்றனர்.
வாசகர் கருத்து (15)
Rathna - Connecticut,இந்தியா
03 மே,2026 - 11:39 Report Abuse
மனித நேயம் கொண்ட சிறந்த மனிதர். குஜராத்தில் முதல்வராக இருந்து அங்கு இருந்து பிரதமராக டெல்லி வரும்போது தனது சம்பள சேமிப்பை முதல்வர் அலுவலக கடை நிலை ஊழியர்களுக்கு பிரித்து கொடுத்தார். 0
0
Reply
bmk1040 - Chennai,இந்தியா
03 மே,2026 - 10:47 Report Abuse
மோடிஜி நாளுக்கு நாள் மிகுந்த முதிர்ச்சியோடு அன்போடு மக்களை நடத்துவதன் மூலம் பழைய மோடிஜியாக மாறி வருகிறார். 0
0
Reply
K.Ravi - Bengaluru,இந்தியா
03 மே,2026 - 10:28 Report Abuse
உலகின் விஷ்வ குருவுக்கு அரணாக நின்று அவரை கண் இமை காப்பது போல இருக்கும், நாட்டின் உயரிய பாதுகாப்பு படையாகிய SPG காமாண்டோ படை வீரர்களாகிய உங்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 0
0
Reply
Keshavan.J - Chennai,இந்தியா
03 மே,2026 - 10:23 Report Abuse
ஆமாம் நீ இருந்தால் என்ன ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்ன 0
0
KavikumarRam - Indian,இந்தியா
03 மே,2026 - 10:59Report Abuse
அறிவாலயத்துல இன்னிக்கு வேலை முடிஞ்சிருச்சா? 0
0
Reply
Nesan - JB,இந்தியா
03 மே,2026 - 10:21 Report Abuse
இது அவர்களது கடமை, அதை பாராட்டிய பிரதமருக்கு பாராட்டுக்கள். 0
0
Reply
Kalyanaraman - Chennai,இந்தியா
03 மே,2026 - 10:02 Report Abuse
அனைத்து நற்பண்புகளும் உள்ள தலைசிறந்த தலைவரை பிரதமராக நாம் பெற்றிருப்பது பாக்கியமே. நாட்டின் அனைத்து மக்களும் எந்த பாகுபாடும் காட்டாமல் இதை உணர்ந்து செயல்பட வேண்டும். 0
0
Reply
NALAM VIRUMBI - Madurai,இந்தியா
03 மே,2026 - 09:17 Report Abuse
பிரதமர் மோடி அவர்கள் மனித நேயத்தை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறார் பாருங்கள். அவர் ஒரு புரட்சித் தலைவர் தான். 0
0
Reply
சந்திரசேகர் - ,
03 மே,2026 - 09:01 Report Abuse
நாட்டுக்கே பிரதமராக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது பிரதமர் தன் சொந்த தொகுதிக்கு அப்பப்ப போயிட்டு வர்றார். ஆனால் இங்கே உள்ள எம்.பி எம்.எல்.ஏ களை அறிவாலய வாசலில் தான் பார்க்க முடியும் போல 0
0
Reply
Venkataraman - ,இந்தியா
03 மே,2026 - 06:48 Report Abuse
SPG க்கு நன்றி.வாழ்த்துக்கள் 0
0
Reply
Venkataraman - ,இந்தியா
03 மே,2026 - 06:46 Report Abuse
பிரதமரை பாதுகாக்கும் சிறப்பு பாதுகாப்பு பிரிவினருக்கு வாழ்த்துக்கள் ,நன்றிகள். 0
0
Reply
மேலும் 4 கருத்துக்கள்...
மேலும்
-
சொல்கிறார்கள் – அவள் விகடன், ஏப்., 21, 2026, பக்: 38 – திறமை மற்றும் தரத்தால் வெற்றி!
-
தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும்; பீயூஷ் கோயல் நம்பிக்கை
-
நமஸ்தே... மேரா பாபா மர்கயா!
-
டில்லியில் தீ விபத்து; 9 பேர் உயிரிழப்பு
-
தயாரிப்பாளர் சங்கம் 'ஸ்டிரைக்'; படப்பிடிப்புகள் பாதிப்பு
-
நாடு முழுவதும் நீட் தேர்வு முதல் பொறியியல் படிப்பு கலந்தாய்வு விண்ணப்பம் துவக்கம் வரை; இன்று (மே 3) முக்கிய நிகழ்வுகள்!
Advertisement
Advertisement