'பேட்மேன்' முருகானந்தம் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை!
கோவை: பெண்களின் சுகாதாரத்திற்காக மலிவு விலை சானிட்டரி நாப்கின் இயந்திரத்தை கண்டறிந்த அருணாச்சலம் முருகானந்தம், இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம், எளிய பெண்களும் பயன்படுத்தும் வகையில் மலிவு விலையில் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி, உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர். இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில், 'பேட்மேன்' திரைப்படம் வெளியானது. ஏற்கனவே மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றுள்ளது. இப்பரிசுக்கு 208 தனிநபர்கள், 79 அமைப்புகள் என மொத்தம் 287 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் ஒருவராக அருணாச்சலம் முருகானந்தம் தேர்வாகியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''கடந்த 40 ஆண்டுகளாக இப்பணியில் என்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளேன்.
ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே உள்ளிட்ட, 40 நாடுகளுக்கு எங்களது மலிவு விலை தொழில்நுட்பத்தை கொண்டு சேர்த்துள்ளோம். டிரினிடாட் மற்றும் டொபாகோ போன்ற சிறிய தீவுகளிலும் எங்கள் தயாரிப்பு இயந்திரம் பயன்பாட்டில் உள்ளது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே இது குறித்த சரியான விழிப்புணர்வு இல்லை. இந்தியாவில் லடாக் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலும் பயிற்சியும், விழிப்புணர்வும் வழங்கி வருகிறோம்.
800 கோடி மக்கள் வாழும் இந்த உலகில், நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள 208 தனி நபர்களில் நானும் ஒருவன் என்பதே பெருமையான விஷயம். இந்திய அரசின் உயரிய விருதைத் தொடர்ந்து, இந்த உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதை சாதனையாகக் கருதுகிறேன்,'' என்றார்.
வாழ்த்துக்கள். விண்வெளி ராக்கெட் கண்டுபிடிப்பை விட உண்மையிலேயே இது தான் மிகப் பெரிய கண்டுபிடிப்பு.
கட்டாயம் பெண்களுக்குத் தேவையான ஒன்று. பெண்ணாக அவதிப் பட்டவர்கள் இவரை கட்டாயம் வாழ்த்துவார்கள்.
இம்மாதிரி கண்டுபிடிப்புகளுக்கு பரிசு கொடுக்கணும். இதற்கும் நோபல் அமைதி பரிசு தேர்வுக்கும் என்ன சம்பந்தம்?
கடினமான உழைப்பின் பலன். வாழ்த்துக்கள் ஜி.
நம்மவர்களின் அருமையை நம்மவர்களே உணர்வதில்லை. நோபல் பரிசுக்கு இவரை சிபாரிசு செய்ததே இந்தியா இவருக்கு நோபல் பரிசு கொடுத்ததற்கு சமம்.
நிக்கோல் ஜி ... காமெடி பண்ணாதீங்க ..... இவர் எப்படி டிரம்ப்புக்குப் போட்டியாவார் ???? துறை ரீதியாக நோபல் பரிசு வழங்கப்படுகிறது .... சமாதானம், புதிய கண்டுபிடிப்புகளுக்கு தனித்தனியே ....
கவனியுங்க .... இவரது வாழ்க்கை வரலாற்றை வைத்து ஹிந்தி ஆதிக்கம் உள்ள பாலிவுட் தான் திரைப்படம் உருவாக்கியது .... திராவிட மாடலுக்கு வால் பிடிக்கும் கோலிவுட் அல்ல ......
Please dont use these types of cheap sanitary pads, the gel and other chemicals used in these pads are known to cause cancer and other many skin related issues. Dont take these issues lightly, you will be helpless when the real issues comes up. So please take adequate precautions and protect your kids with home made napkins.
வாழ்த்துக்கள். தினமலர் ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள். திரு.முருகானந்தன் பற்றியும், அவரது முயற்சிகள் பற்றியும், பிரத்யேகமாக ஒரு முழு பக்க கட்டுரை பிரசுரியுங்களேன், அது பலருக்கு உந்துகோலாக இருக்குமென்று நம்புகிறேன்.
வாழ்த்துக்கள் ஐயா. தமிழர் என்பதில் பெருமையாக உள்ளது
வாழ்த்துக்கள் சார். உலகம் முழுதும் பயன்படும் தயாரிப்பை கண்டுபிடித்து தமிழன் தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள்.
போலி சாதனைகளுக்கு நடுவில் மின்னுகிறது உங்கள் முயற்சி. இங்கு எதற்கெல்லாமோ விருது வழங்குகிறார்கள். .மேலும்
-
மதுரையில் இருவர் உடல் மீட்பு; போலீசார் விசாரணை
-
மத்திய பார்வையாளர்களுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை; நாளை ஓட்டு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரம்
-
சொல்கிறார்கள் – அவள் விகடன், ஏப்., 21, 2026, பக்: 38 – திறமை மற்றும் தரத்தால் வெற்றி!
-
தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும்; பீயூஷ் கோயல் நம்பிக்கை
-
நமஸ்தே... மேரா பாபா மர்கயா!
-
டில்லியில் தீ விபத்து; 9 பேர் உயிரிழப்பு