தபால் ஓட்டுகளை எண்ணி முடித்தபின்பே இறுதிச் சுற்று ஓட்டுகளை எண்ண ஏற்பாடு
மதுரை: மதுரை மாவட்டத்தின் பத்து தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 5 மையங்களில் (மே 4) காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.
ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக நேற்று கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை நடத்தினர். மையங்களில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், பாதுகாப்பு பணிகள் தொடர்பாக அவர்கள் பேசினர்.
கலெக்டருடன், பார்வையாளர்கள் அந்தராஆச்சார்யா, தினேஷ்குமார், வேத்பதி மிஸ்ரா, மிங்மா டி ஷெர்பா, சமர்த் வர்மா, முகமது முஷாரப்அலி பாரூக்கி, கிருத்யா நந்த் ரஞ்சன், நிதின் குணாஜி மகராஜன், சாந்த் மே வர்மா மற்றும் போலீஸ் எஸ்.பி.அரவிந்த், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
முதலில் தபால் ஓட்டுகள் (மே 4) காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். மாவட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் ஓட்டுகள், 5 மையங்களிலும் 47 மேஜைகளிலும், ராணுவ வீரர்களின் ஓட்டுகள் 17 மேஜைகளிலும் எண்ணப்படும். இதில் 308 ஊழியர்கள் ஈடுபடுவர்.
அடுத்து காலை 8:30 மணிக்கு மின்னணு ஓட்டுப் பெட்டிகளில் பதிவான ஓட்டுகளை 1300 ஊழியர்கள் எண்ணத் துவங்குவர். அதேசமயம் தபால் ஓட்டுகளை எண்ணும் பணியும் தனியாக ஒரு பகுதியில் தொடர்ந்து நடைபெறும்.
தபால் ஓட்டுகளை ஒவ்வொன்றாக பிரித்து அதில் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து, ஓட்டுச் சீட்டில் சரியாக டிக் செய்துள்ளாரா என பிரித்து, படிவங்கள், கவர்களை சரியாக வைத்துள்ளாரா என்றெல்லாம் சரிபார்த்து, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடமும் காட்டி, பின்பு 15 வேட்பாளர்களுக்குமான பெட்டிகளில் தனித்தனியாக வைக்க வேண்டும்.
கடைசி சுற்றுகள் நிறுத்தம்
இவ்வாறு 25 ஆயிரம் ஓட்டுக்களையும் எண்ண வேண்டியிருப்பதால் அப்பணி தனியாக நடக்கும். இதற்கிடையே மின்னணு இயந்திரத்தில் ஓட்டுகளை பல சுற்றுக்களாக எண்ணுவர். ஒவ்வொரு சுற்றும் முடிந்தபின், எண்ணிக்கையை சரிபார்த்து பதிவு செய்த பின்பே அடுத்த சுற்று துவங்கும்.
இந்த சுற்றுக்கள் தொடர்ந்து நடக்கும்போது தபால் ஓட்டு எண்ணிக்கை முடிவடையாமல் இருந்தால், இயந்திர பதிவு ஓட்டுகள் எண்ணுவதை கடைசி 2 சுற்றுகள் இருக்கும்போது நிறுத்தி வைக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அந்நேரத்தில் தபால் ஓட்டுகள் முழுவதையும் எண்ணி முடித்து அறிவித்த பின்பே, இயந்திர பதிவு ஓட்டுகளில் நிறுத்தப்பட்ட சுற்றுக்களை தொடர வேண்டும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
மேலும்
-
நேரடி வரி வசூல் ரூ.23.40 லட்சம் கோடியாக அதிகரிப்பு
-
ஆண்டிபட்டியில் தம்பியை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற அண்ணன்
-
மன்னராட்சிக்கு மக்கள் முடிவு: ஆதவ் அர்ஜுனா உற்சாகம்
-
சசிகலா வேட்பாளரால் பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தோல்வி
-
பிரதான கட்சிகள் வழங்கிய பணத்தை வாங்கி தம் விருப்பப்படியே ஓட்டளித்த வாக்காளர்கள்
-
திமுகவில் ஓரம் கட்டப்பட்ட வி.எஸ்.பாபு முதல்வரை எதிர்த்து வெற்றி