நேரடி வரி வசூல் ரூ.23.40 லட்சம் கோடியாக அதிகரிப்பு
புதுடில்லி: கடந்த நிதியாண்டில் நிகர நேரடி வரி வசூல் 5.12 சதவீதம் அதிகரித்து, 23.40 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளதாவது: கடந்த நிதி ஆண்டில் நேரடி வரி வசூல் 5.12 சதவீதம் உயர்ந்து 23.40 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. முந்தைய 2024 - 25 நிதி ஆண்டில் இது 22.26 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
2025 - 26 நிதி ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டில், நேரடி வரி வசூல் இலக்கு 24.21 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இதில் கார்ப்பரேட் வரி 11.09 லட்சம் கோடி ரூபாயாகவும், தனிநபர் வருமான வரி 13.12 லட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டது.
ஆனால் கார்ப்பரேட் வரியாக 10.99 லட்சம் கோடி ரூபாயும், தனிநபர் வருமான வரியாக 12.41 லட்சம் கோடி ரூபாயும் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு தெரிவித்துள்ளது.