பிரதான கட்சிகள் வழங்கிய பணத்தை வாங்கி தம் விருப்பப்படியே ஓட்டளித்த வாக்காளர்கள்
கடலுார்: தமிழகத்தில் பிரதான கட்சிகள் வாரி இறைத்த பணத்தை வாங்கிக் கொண்டு, ஆட்சி மாற்றம் ஏற்பட வாக்காளர்கள் தங்கள் விருப்பப்படி ஓட்டுபோட்டது தேர்தல் முடிவில் தெரியவந்துள்ளது.
கடந்த காலங்களில் நடந்த தமிழக சட்டசபை தேர்தல்களில் முன்னணியில் இருந்த பிரதான கட்சிகள் வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு, அதற்கு கைமாறாக சத்தியத்திற்கு கட்டுப்பட்டு அந்தந்த கட்சிக்கு ஓட்டுப்போட்டனர்.
கடந்த கால தேர்தலை போன்றே இப்போது நடந்து முடிந்த தேர்தலிலும் தி.மு.க.,- அ.தி.மு.க., கட்சிகள் வாக்காளர் களுக்கு பணம், பரிசு பொருட்களை வாரி இறைத்தது.
பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கியதை தேர்தல் ஆணையமும் வாய்திறக்காமல் 'கப்சிப்' என இருந்துவிட்டது.
கடந்த கால தேர்தல்களில் பட்டுவாடா செய்யப்பட்ட 'ப' வைட்டமின் வைத்தே வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயித்தன.
ஆனால், தற்போதைய தேர்தலில் கட்சிகள் கொடுக்கும் பணத்தை முழுவதும் பட்டுவாடா செய்பவர்களை தேடி பிடித்து தங்களுக்கு ஓட்டுப்போடுவதாக உறுதி கூறி பணத்தை பெற்று வந்தனர்.
ஆனால் கைநீட்டி வாங்கியதை மறந்துவிட்டு தங்களின் விருப்பப்படியே ஓட்டுப்போட்டது தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
திமுக அண்ணா திமுக இரு கட்சிகளிடம் பணம் பெற்ற பெண் யாருக்கு ஓட்டு என்று கேட்ட போது பணம் கொடுக்காத விஜய்க்கு என்றபோது, ஆச்சரியமாக இருந்தது.
90 சதவீத பெண்கள் இளைஞர்கள் தேர்வு விஜய். ஓட்டுக்கு கட்சிகள் வழங்கும் இலவசத்தை நீதிமன்றம், நிர்வாகம் நிறுத்தினால், ஜனநாயகம் முழுமை பெறும்.
திராவிட குற்றவாளிகள் மீது அதிகாரிகள் துணிந்து நடவடிக்கை எடுப்பார்கள். இனி சட்ட விரோத நெட்வொர்க் முறிந்து விடும்.
திருடன் ஆளும் நாட்டில் திருட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டு திருட்டுத்தனத்தை காட்டிய திருட்டுப் பொதுமக்கள்.
மக்கள் தெளிவாகி விட்டனர்! நம் மக்கள் சாக்லெட் கொடுத்து பிள்ளை பிடிப்பவனிடம் சாக்லெட்டும் வாங்கிக் கொண்டு அவன் கண்களில் மண்தூவி தப்பித்து விட்டனர்!
திருமங்கலம் ஃபார்முலா இந்த தேர்தலில் வேலை செய்யவில்லை! இது நல்ல ஜனநாயக முதிர்ச்சி! பணத் திமிர், அதிகாரத் திமிர் பிடித்த, அரசியல் அமைப்பு பற்றி அடிப்படை அறிவற்ற, சுயநல, விளம்பர மோக ஆட்சியாளர் முகத்தில் கரி பூசப்பட்டது!
இது நல்ல போக்கு தொடர் வேண்டும்!
DMK and ADMK இரண்டும் தங்களுடைய சொந்த பணத்தை தரவில்லையே. மக்கள் பணத்தை கொள்ளையடித்து மக்களுக்கே கொடுத்தனர். இந்த தேர்தல்ல தான் மக்கள் சரியான வேலை செய்திருக்கின்றனர்.
சபாஷ்... சரியானதே
பணம் கொடுத்தவனுகளுக்கு சரியான செருப்படி இனி பண பலம் கொண்டு வெல்ல முடியாது என நிரூபிக்க பட்டுள்ளது
வரவேற்க பட வேண்டும்