கில் ஏமாற்றம்... சாய் சுதர்சன் நிதான ஆட்டம்; வெல்லப்போவது யாரு?
ஆமதாபாத்: பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 164 ரன் என்ற இலக்குடன் குஜராத் அணி நிதானமாக ஆடி வருகிறது.
ஆமதாபாத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு முதல் ஓவரிலேயே சிராஜ் அதிர்ச்சி கொடுத்தார். போட்டியின் 2வது பந்தில் பிரியன்ஷ் ஆர்யாவையும் (2), 3வது பந்தில் கனோலியையும் (0) அவுட்டாக்கினார். அதன்பிறகு, பிரப்சிம்ரன் சிங் (15), வதேரா (0), கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் (19) ஆகியோர் அடுத்தடுத்து ஏமாற்றம் அளித்தனர். இதனால், பஞ்சாப் அணி 47 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
தொடர்ந்து, சூர்யான்ஷ் மற்றும் ஸ்டொய்னிஷ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இளம் வீரர் சூர்யன்ஷ் 29 பந்துகளுக்கு 57 ரன் குவித்தார். ஸ்டொயினிஷ் 40 ரன்னும், யான்சென் 20 ரன்னும் விளாசினர். இறுதியில் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 163 ரன் சேர்த்தது. குஜராத் அணி தரப்பில் ஹோல்டர் 4 விக்கெட்டும், சிராஜ், ரபாடா தலா 2 விக்கெட்டும், ரஷித் கான் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து, 164 ரன் என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு, கேப்டன் கில் 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதன் பிறகு, பேட்லர் சிறிது நேரம் தாக்குபிடித்து 22 ரன் சேர்த்தார். மறுமுனையில் சாய் சுதர்சன் நிதானமாக ஆடி ரன் சேர்த்து வருகிறார்.
மேலும்
-
சென்னைக்கு .... மெயின் செய்திக்கு இணைப்பு
-
உளுந்துார்பேட்டை தொகுதியில் தி.மு.க., – அ.தி.மு.க., க்கு இறுதி வரை கடும் போட்டி
-
ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதால் உளுந்துார்பேட்டை முடிவு தாமதம்
-
வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சி இல்லை தே.மு.தி.க., தொண்டர்கள் வாட்டம்
-
பிரேமலதாவுக்கு தேர்தலில் முதல் வெற்றி இறுதிவரை இழுபறியால் திக்..திக்..
-
திண்டிவனம் (தனி) தொகுதி வி.சி., வெற்றி